நீலமலை, மேட்டுப்பாளையம் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, தாராபுரம், ஈரோடு மாவட்ட கழக பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு

1 Min Read

எதிர்வரும் அக்டோபர் 26, 27 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் சத்தியமங்கலம் தாளவாடி வட்டம் ஆசனூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரண்டு நாட்களும் பங்கேற்று வகுப்பு நடத்துகிறார்கள்.
மற்றும் தலைமை கழக பொறுப்பாளர்கள் பேராசிரியர் பெருமக்கள் பங்கேற்று வகுப்பு நடத்துகிறார்கள்.
அருகாமையில் உள்ள மாவட்டங்களான நீலமலை, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, தாராபுரம், ஈரோடு மாவட்ட திராவிடர் கழக பொறுப் பாளர்கள் மாவட்டத்திற்கு 5 இளைஞர்களை அனுப்பி வைத்திடுமாறு வேண்டுகிறோம்.
மலைப்பகுதி என்பதால் முன்பதிவு இல்லாமல் தங்குமிடம் ஏற்பாடு செய்ய இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெயர், படிப்பு, ஊர், தொலைபேசி எண் உள்ளிட்ட பயிற்சி மாணவர்களின் விவரங்களை உடனடியாகத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
அக்டோபர் 25 இரவு சத்தியமங்கலம் வந்து விட வேண்டும் சத்தியமங்கலத்தில் இரவு தங்குவதற்கு மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 26 அதிகாலை புறப்பட்டு பயிற்சிப் பட்டறை நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

தொடர்புக்கு:
மு.சென்னியப்பன்-9841578862, த.சண்முகம்-9842410620, வெ.குணசேகரன்-8778598988, சிவபாரதி-9003485618,
சூர்யா-9578042348
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம், தொடர்புக்கு 9842598743

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *