அறந்தாங்கி கழக மாவட்டம் புளிச்சங்காடு கைகாட்டியில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா அறிஞர் அண்ணா 116ஆம் ஆண்டு விழா சுயமரியதை இயக்க நூற்றாண்டு விழா, கழக பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் க.மாரிமுத்து தலைமையேற்க மாவட்ட செயலாளர் ச.குமார், மாவட்ட துணை தலைவர் பெரியார் வீர விளையாட்டு கழக மாநில அமைப்பாளர் கரம்பகுடி முத்து ப.மகாராசா, மாவட்ட ப.க செயலாளர் க.வீரையா ப.க துணைச்செயலாளர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை ஏற்றனர். தொடக்க உரையாற்றினர் கழக பேச்சாளர் மாங்காடு மணியரசன்.