உச்சநீதிமன்றத்தில் காவல் துறையினர் நிலவர அறிக்கை தாக்கல்
கோவை, அக்.18 ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்தி வரும் ‘ஈஷா பவுண்டேஷன்’ ஆசிரமத்தில் சட்டவிரோதமாக இரு பெண்கள் அடைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவில் பேரில் காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்துள் ளனா்.
இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி அமா்வில் இன்று (18.10.2024) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.இந்த ஆசிரமத்தில் தனது இரு மகள்கள் அடைத்து ுவைக்கப்பட்டிருப்பதாக கூறி ஓய்வுபெற்ற பேராசிரியா் எஸ்.காமராஜ் என்பவா் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதி மன்றத்திற்கு மாற்றியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது.
இந்த விவகாரத்தில் ஈஷா பவுண்டேஷன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு , பெண்கள் சட்ட விரோதமாக ஆசிரமத்தில் அடைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரிக்கக் கோரும் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கொண்டு செயல்படுத்தாமல் இருக்குமாறு தமிழ்நாடு காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவின்படி நிலவர அறிக்கையை காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள்அமா்வு உத்தரவிட்டிருந்தது.
இதை யடுத்து, தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளா் கே.கார்த்திகேயன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 23 பக்க நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 15 ஆண்டுகளில் ஈஷா பவுண்டேஷன் தொடா்புடைய விவகாரத்தில் ஆலந்துறை காவல் நிலையத்தில் மொத்தம் 6 காணாமல்போனவா்கள் குறித்த வழக்குகள் பதிவானதும், அதில் 5 வழக்குகளில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதும் ஒரு வழக்கில் காணாமல் போனவா் இன்னும் கண்டறியப்படாததால் வழக்கு இன்னும் விசாரணை யில் இருப்பதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், 7 வழக்குகள் சிஆா்பிசி பிரிவு 174-இல் பதிவு செய்யப் பட்டிருந்ததையும், அவற்றில் இரு வழக்குகள் விசாரணையின்கீழ் இருப்பதும் நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.