திருவிடைமருதூர், அக். 18- திருவிடைமருதூர் ஒன்றியம், கல்யாணபுரம், பெரியார் நகரில் சுயமரியாதைச் சுடரொளி ச.ஜோதி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 15-10-2024 செவ்வாய், காலை 11 மணியளவில் திருவிடைமருதூர் ஒன்றிய கழக தலைவர் எம்.என்.கணேசன் தலைமையில் நடைபெற்றது. ச.ஜோதியின் படத்தினை திறந்து வைத்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செ.இராமலிங்கம் நினைவேந்தல் நிறைவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கழக பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட தலைவர் நிம்மதி, குடந்தை மாநகர தலைவர் இரமேஷ், மேனாள் மாவட்ட செயலாளர் மில்லர், தி.மு.க பேரூர் கழக செயலாளர் மகாலிங்கம்,வேப்பத்தூர் பேரூராட்சி பெருந்தலைவர் அஞ்சம்மாள், பேரூராட்சி துணைத் தலைவர் சுதா, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கிருஷ்ணராஜ், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய துணைத்தலைவர் முருகானந்தம், மாவட்ட கழக தொழிலாளரணி துணைத்தலைவர் சிவக்குமார், மாவட்ட மகளிரணி தலைவர் திரிபுரசுந்தரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்வேந்தன், திருநாகேஸ்வரம் நகர கழகத் துணை செயலாளர் குருமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் காமராஜ், திருப்பூர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் முனியாண்டி ஆகியோர் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
வருகை தந்தோருக்கு சண்முகத் தாய் ஜோதி மற்றும் அறிவுகண் ஆகியோர் நன்றி கூறினர்.