பணியாளர் தேர்வு வாரியம் நீதிக்கட்சி அரசால் தொடங்கப்பட்ட நாள் இன்று (18.10.1929)
அரசுப்பணிக்கான வேலைவாய்ப்பில் இந்தியா விற்கே வழிகாட்டிய நீதிகட்சி
1929-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகணச் சட்டத் தின்படி “மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்” (Madras Service Commission) தொடங்கபட்டது.
இந்தியாவில் தொடங்கபட்ட முதல் பணியாளர் தேர்வாணையம் என்ற சிறப்பை உடையது” தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்”. மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் முதன்முதலில் தலைவர் உட்பட மூன்று பேர் கொண்ட அமைப்பாக இருந்தது.
மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957இல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது.
சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது.இதன் மூலமாகவே அரசுத்துறைகளில் அடி மட்ட அளவில் இருந்து உயர்மட்ட அளவில், பணியா ளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் இருக்கும் காலிப் பணியிடங்கள் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 என பிரிவுகளாக பிரித்து நிரப்பப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகள் அளிக்கும் பட்டியல்களை கொண்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுத்திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதி வாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்து பணி வழங்குகிறது. தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.