பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை; தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துகிறான். வாகனமாய் உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாயிருந்து தன் குலத்தின் உழைப்பாலேயே வாழ்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும், பயன் அனுபவிக்க இன்னொரு கூட்டமாகவும் பிரிந்து கொள்ளுகிறான்.
(‘குடிஅரசு’ – 2.5.1935)