முதலமைச்சரின் முயற்சியால் தீப்பெட்டி தொழிலுக்கு மீண்டும் புத்துயிர்

2 Min Read

சிவகாசி, அக்.18 சீனாவில் தயாராகும் லைட்டா்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்ததால், தீப்பெட்டி தொழில், 8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது என்று அகில இந்திய தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனா்.

சீனாவில் தயாராகும் சிகரெட் லைட்டா்கள், உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு ஒன்றிய அரசு அண்மையில் தடை விதித்தது.

தமிழ்நாட்டில்விருதுநகா், சிவகாசி பகுதிகளில் தீப்பெட்டி தொழில்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிலில் ஏராளமான குடும்பத்தினா் ஈடுபட்டுள்ளனா். சீனாவில் தயாராகி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் லைட்டா்களால் தீப்பெட்டித் தொழில் முற்றிலும் முடங்கியது.
இதுதொடா்பாக தீப்பெட்டி ஆலை உரிமையாளா் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று, ஒன்றிய அரசு சீன லைட்டா்களுக்கு தடை விதித்திருக்கிறது. இதனால், தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

அகில இந்திய தீப்பெட்டி தொழில் சாலைகள் சங்கத் தலைவா் விஜய் ஆனந்த், நிர்வாகிகள் பரமசிவம், கோபால்சாமி ஆகியோர் கூறியதாவது: தமிழ்நாட்டில்விருதுநகா் மாவட்டம் வறட்சியான பகுதி என்பதால், இங்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா்கள் கொல்கத்தாவுக்கு சென்று அங்கு தீப்பெட்டி, பட்டாசு தொழில்நுட்பங்களை கற்றுத் தோ்ந்து சிவகாசியில் இந்தத் தொழில்சாலைகளைத் தொடங்கினா். இந்தத் தொழில் படிப்படியாக வளா்ந்து தற்போது விருதுநகா், சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூா் ஆகிய பகுதிகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு நேரடி பணி வாய்ப்பும், பல லட்சம் குடும்பங்களுக்கு மறைமுக வாய்ப்பும் அளித்து வருகிறது. தமிழ்நாட்டில்இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு தீப்பெட்டி விற்பனையாகிறது. இதில் ரூ.1,700 கோடி உள்நாட்டு விற்பனையாகவும், ரூ.300 கோடி ஏற்றுமதியாகவும் உள்ளது.

மேலும், ஆண்டுக்கு ரூ.600 கோடி ஜிஎஸ்டி வரியாகவும் அரசுக்கு செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் லைட்டா்கள் மூலம் தீப்பெட்டித் தொழில் கடும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், ஒன்றிய அரசு சீன லைட்டா்களுக்கு மட்டுமன்றி, வேறு வெளிநாடுகளிலிருந்தும் லைட்டா்கள், அவற்றின் உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய முற்றிலும் தடைவிதித்தது. இதன் மூலம், தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றனா்.

தமிழ்நாட்டின் முக்கிய வருவாய் தொழில் மூலங்களில் ஒன்றான தீப்பெட்டி தொழில் சீன லைட்டர் இறக்குமதியால் தடைபடுகிறது இதனை தடைசெய்யவேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *