சென்னை, ஆக. 1 – முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள், முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளு மாறு சமூக நலத்துறையின் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனம் வாயிலாக ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதில் 2001 முதல் மார்ச் 2023 வரை 9 லட்சத்து 56 பெண் குழந்தைகள் பதிவு செய் துள்ளனர்.
குடும்பத்தில் பிறந்த ஒரே ஒருபெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரத்துக்கான நிலை வைப்புத் தொகையும், 2 பெண் குழந்தை களுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக் கான நிலைவைப்புத் தொகையும் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்படும்.
அதேபோல முதல் பிரசவத் தில் ஒரு பெண் குழந்தையும், 2ஆவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் என மொத் தம் 3 பெண் குழந்தைகள் இருந் தால், சிறப்பு அனுமதியின் பேரில் ஒவ்வொரு பெண் குழந் தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் முதலீடு செய்யப்படும்.
இதில் பயன்பெற குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண் டும். அதேநேரம் 2-வது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண் டும். பெற்றோர்களில் ஒருவர் 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். மேலும் பெண் குழந்தைகள் 10ஆ-ம் வகுப்பு எழுதி, 18 வயது வரை குழந்தை திருமணம் புரியாமல், இருக்கும் நிலையில் அவர் களுக்கு வட்டியுடன் கூடிய வைப்புத் தொகை, முதிர்வுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2001 முதல் 2005 வரை பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18 வயதை நிறைவு செய்த 1 லட்சத்து 40,003 பெண் குழந்தைகளுக்கு ரூ.350.28 கோடி முதிர்வுத் தொகையாக வழங்கப் பட்டுள்ளன. இதற்கிடையே 1.5 லட்சத்துக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் 18 வயது நிறைவ டைந்தும் இதுவரை முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர்.
இதையொட்டி அனைத்து மாவட்ட சமூக நல அலுவலகங் களில், மாதந்தோறும் 2ஆ-ம் செவ்வாய்க்கிழமை, பெண் குழந் தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக பயன் பெற விரும்புவோர், 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் முதிர்வுத் தொகைக்காக விண் ணப்பிப்போர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனை களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ், பதிவு செய்து 18 வயது நிரம்பிய குழந்தைகள் ஒரு மாதத்துக்குள், தங்களது பெய ரில் தொடங்கிய புதிய வங்கிக் கணக் கின் புத்தகநகலுடன், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு சமூக நலத்துறை ஆணை யர் அறிவுறுத்தியுள்ளார்.