தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (01.08.2023) சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், சிறுநீரக டயாலிசிஸ் பிரிவில், அதிநவீன டயலிசிஸ் இயந்திரங்களை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.இரா.சாந்திமலர், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மரு.பார்த்தசாரதி, மருத்துவமனை சிறப்பு அலுவலர் மரு.ரமேஷ் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.