பி.இராமநாதன் எம்.ஏ., பி.எல்.,
தமிழரின் சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள் 1920-இல் ஹரப்பாவிலும் 1929-இல் மொகஞ்சோதாரோவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டு அவைபற்றிய விவரங்கள் சர் ஜான் மார்ஷலால் 1987-இல் வெளியிடப்படுவ தற்கு முன்னரே மறைமலை அடிகள் தம்முடைய “வேளாளர் நாகரிகம்” (1923) போன்ற நூல்களில் ஆரியர்கள் சிந்துவெளியில் கி.மு. 1500 அய் ஒட்டி நுழைந்த பொழுது அங்கு பரவியிருந்த (தமிழருடைய) நகர நாகரிகத்தை வன்முறையில் அழித்தொழித்ததை ஆரியர் வேதங்களில் உள்ள சான்றுகளைக் கொண்டே நுண்ணிதின் உணர்ந்து அறுதியிட்டு எழுதியிருப்பது வியக்கத் தக்கது. அடிகளார் அருங்கருத்தைப் பின்னர் மார்ஷல்; சர். மார்டிமர் வீலர் ‘முதலியவர்கள் ஏற்றுள்ளது பற்றியும் சிந்து வெளி நாகரிக முத்திரை எழுத்துகள் தமிழ் அல்லது தமிழ்சார்ந்த மொழியாகத்தான் இருக்கவேண்டும் என்பது குறித்தும் செந்தமிழ்ச்செல்வி சிலம்புவில் (மே 1989) வெளி வந்த “தமிழரின் சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள்” என்னும் கட்டுரையில் கண் டோம். வேதமொழி மற்றும் சமஸ்கிருத வல்லுநரான மாலதி ஜே. செண்டுகே என் பவர் 1977-இல் எழுதியுள்ள “நாகரிக அசுரர்கள்-ரிக் வேதத்தில் ஹரப்பா மக்கள்” என்னும் விரிவான நூலும் அடிகளார் கருத்தை அரண்செய்வதை விளக்குவதே இக்கட்டுரை.
சிந்துவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்களில் அக் காலத்தில் வசித்துவந்த நாகரிகம் வாய்ந்த மக்களைத் தான் ஆரியர், தமது வேதங்களில் அசுரர்கள், இராட்சதர்கள், கந்தருவர்கள், யட்சர் கள், பிசாசர்கள் என்று இசுழ்ந்துரைத்தனர் என்று செண்டுகே நிறுவுகிறார். அம் மக் களோடு நெடுநாள் கடும் போர்கள் செய்தும் பல்வேறு கொடுமையான சூழ்ச்சிகள் செய்தும்தான் ஆரியர்கள் வெற்றி பெற்றமையால் அந் நிகழ்ச்சிகனை விரிவாகத் தம் ரிக் வேதப்பாடல்களில் கூறியுள்ளனர்.
சிந்துவெளித் தமிழர்களை (திராவிடர்களை)ஒழிப்பதில் முன்னணியில் நின்ற ஆரியத் தலைவன் ஒருவன் தான் பின்னர் இந்திரன் என்னும் பெயரில் ஆரியக் கடவுளர்களில் ஒருவனாக ஆக்கப்பட்டவன்.
“புரந்தரன்” “புரம் பேட்டா” (கோட்டைகளை அழிப்பவன்); மற்றும் தாஸ்யோ அந்தன் (தாசர் கொல்லி) ஆன இந்திரனால் கொல்லப்பட்ட “அசுரர்கள்” மற்றும் “தாசர்கள்” ஆக ரிக்வேதம் குறிப்பிடுபவர்கள் கரஞ்சன் ; பர்ணயன் : வங்கிருதன் (புரங்கள் 100 உடையவன்); அஹிசுவன்; சிரிபிந்தன்; அனர்சனி; பிப்ரு (கருநிறத் தவர்களான போர் வீரர்கள் 50,000 பேர்களையுடையவன்); விருத்திரன்; ஔர்ண வாபன்; அற்புதன்; இவிபிசன் ; அசுரபிரகச் சிராவன்; அசுர விருக் கடவாரன்; சம் பாரன் (99 கோட்டையுடையவன்); சுஷ்ணன் (செழியன்? -அசையும் கோட்டை – கப்பல் உடையவன்); அரரு; நமுசிடு – உரணு; ஸ்வர்பானு ஆகியோராவர்.
பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்திரனால் கொல்லப்பட்ட “தாச” ஆசர்களும் பலர். நமுசி முதலில் இந்திரனோடு நட்பாக இருந்து பின்னர் அவனால் கொல்லப்பட்டவன். சுதரசன் உடன் சேர்ந்து சம்பாரனையும் பின்னர் பத்து அரசர்களையும் இந்திரன் கொன்றான். ரிஜிஸ் வான் உடன் சேர்ந்து பிப்ருவையும், நமிசாப்யனோடு சேர்ந்து நமூசியையும் வென்றுள்ளான்.
விஷ்னர்வும் உசாகளி யும் (சுக்கிரன்’) அசுரர்களைப்பற்றி ஆரியர்களுக்கு உளவு அறிவித்தவர்களாக இருக்க வேண்டும்.சிந்துபதிஎன்னும் “சாம் வருணன் சிந்துவெளி மன்னனாகவே இருந்திருக்கவேண்டும் என்பதும் காட்டிக் கொடுப்பான்களால் தனதுவலிமை குன்றிய பிறகு அவன் ஆரிய இந்திரனுடன் சமாதானம் செய்து கொண்டிருக்கவேண்டும் என்பதும் செண்டுகேயின் முடிவு.”அசுர” என்னும் பெயர் ரிக்வேதத்தில் நல்ல பொருளில் (வருணன், மித்திரன் போன்ற வர்களுக்கு அடையாகவும்) 60 இடங்களில் வருகிறது. இந்திரன் அசுரத்துவம் வாய்ந்தவனாகப் புகழ்ப்படுகிறான். பின்னர் தாசர்கள், தஸ்யூக்களுக்கும் அந்த அடை மொழி பயன்படுத்தப்பட்ட பிறகு “அசுர” என்பது கெட்டவர்கள் என்ற பொருளில் 19 இடங்களில் ரிக்வேதத்தில் வருகிறது.
அசுரர்கள் “மாயை” உடையவர் கள் என ரிக் வேதம் கூறுகிறது. ‘‘மாயை” யின் ஆதிகால வேர்ப் பொருள் சிருஷ்டி ஆற்றல் (ஆக்க ஆற்றல்) என்பதே. சதபத பிராமணம் (Vi 8. 1. 1-2) மாளிகைகளில் இருந்ததாகவும் தேவர்கள் வண்டிகளில் திரிந்ததாகவும் (தேவஸ் சுக்ரமசாரஞ் சாலாமசுரா ஆசன்) கூறு கிறது. அசுரர்களுடைய மாளிகைகளையும் கோட்டை களையும், அணைக்கட்டுகளையும், வேளாண்மை யையும் கண்டு மருண்ட ஆரியர்களுக்கு அசுரர்கள் மாயை உடையவர்களாகத் தோன்றியது வியப்பன்று. பின் காலத்தில்தான். மாயைக்குத் தற்பொழுது உள்ள “போலித் தோற்றம்” என்னும் பொருள் வந்தது.
ரிக்வேதத்தில் “அக்னி அசுரக்ன’’ (அசுரர்கொல்லி) என்று அழைக்கப்படுகிறான். நகரங்கள் (ஆரிய ரால்)நெருப்பிலிடப்பட்டதற்கான தடயங்கள் மொஹெஞ்சோதாரோவில் கிட்டியுள்ளன. நெருப்பில் கும்பலாக மாண்டவர்களின் எலும் புக்கூடுகளும் கிட்டிள்ளன, முயன் ஜோ தடோ (Muan jo dado) என்னும் சிந்தி மொழிச் சொற்றொடரின் பொருள் பிண மலை (முயன்-பிணம் ; ஜோ-உடைய;- தடோ-மலை ) என்பதாகும். மொஹெஞ் சோதாரோ என்பது வங்காளிமொழி வடிவ மாகும். இதே பிணமலை என்னும் பொருளை ரிக்வேதம் 1. *33. 198-இல் “வைல்ஸ்தானம் என்னும் சொல்லுக்கு சயனர் பாஷ்யம் தருகிறது. “வைல” என்பது ஆரியச் சொல் அன்று என்பது பரோ (Burrow) கருத்து. வேள்-வேளகம் என்பதிலிருந்து வைலஸ்தானம் வந்திருக்கக் கூடும். புறநானூறு 201-இல் இருங்கோவேள் முன்னோர் ஆண்டாதாகக் கூறப்படும். “செம்புபுனைந்தியற்றிய சேணெடும் புரிசை” சிந்துவெளி நாகரிக கால நகர மாக இருக்கவேண்டும் என்பது அய். மகா தேவன் கருத்து, வேளகம் அழிக்கப்பட்டு பிணமலையான பொழுது “வைலஸ் தானம்” என்றாலே பிணமலை என்னும் பொருள் உண்டாகி பின்னர் சிந்திமொழிப் பெயர் ஆன முயன் ஜோ தடோவும் அப் பொருளில் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
சிந்துவெளி நாகரிக நகரங்களை அழிக்கத் தீயை மட்டுமன்றி வெள்ளத்தையும் ஆரியர் பயன் படுத்தியிருக்க வேண்டுமென்று செண்டுகே நிறுவுகிறார். சிந்து வெளியில் சில பல அணைக்கட்டுகளைக் கட்டி நல்ல நீர்ப்பாசன வசதிகளைச் சிந்து நாகரிக மக்கள் செய்திருக்கவேண்டும் என் பதற்கான (அக்கால அணைக்கட்டுத்) தட யங்கள் இப்பொழுதும் உள்ளன. இந்திரனால் அழிக்கப்பட்டவனாக ரிக்வேதம் 1. 32இல் குறிப்பிடப்படும் விருத்திரன் என்னும் தாசன் அணைக்கட்டுக் காவல் அதிகாரியாக இருந்திருக்க வேண்டும். “விருத்திரானி” என்று அழைக்கப்படும் விருத்திரன் ஆள்கள் துணை அதிகாரிகளாக இருக்க வேண்டும்.விருத்திரனைக் கொன்று, மூடியிருந்த தண்ணீர் வாயிலை இந்திரன் திறந்தான் (அபம்பில்ம் அபீஹிதம் யதாசித், வ்ருத்ரம் ஜகன்வான் அபா தத் வவாரா) என்கிறது ரிக்வேதம். செயற்கைத் தடைகளை (அணைகள், கரைகள்) நீக்கி னான் இந்திரன் (ரீநாக்ரோதாம் ஸி கிருத்ரி மாணி ஏசாம்) என்றும் சொல்லப்படுகிறது. அணைகளை உடைக்கும் இந்தத் திருப் பணியை இந்திரன் பல ஆண்டுகளாகச் செய்து வந்ததாக ரிக்வேதம். IV. 19. 8 புகழ்கிறது! இந்திரன் புகழில் தலைசிறந்ததாகக் கூறப்படுவது விருத்திரனை அழித்ததுதான்.
சதபத பிராமணத்தில் (III. 2. 1. 24) தேவர் – அசுரர் போரைப்பற்றிக் கூறும் பொழுது மிலேச்சர்களாகிய அசுரர்களுடைய ‘’வாக்” அய் (பேச்சை) தேவர்கள் நெருப் பிவிட்டு ஆகுதி செய்ததாகவும் அப்பொழுது அசுரர்கள் “ஹெலயோ! ஹெலயோ!’ (அய்யோ, அய்யோ?) என்று கதறியதாகவும் கூறப்படுகிறது. அசுரர்களை நெருப்பிலிட்டுக் கொளுத்தியதையும் அவர்கள் மொழி நூல்களைக் கொளுத்தியதையும் குறிக்கலாம் என்கிறார் செண்டுகே. சிந்து வெளித் தமிழர்கள் எழுதுவதற்கு (பனையோலை போன்ற) அழியும் பொருள்களைப் பயன்படுத்தியிருக்கலாம். அவை முற்றும் ஆரியரால் அழிக்கப்பட்ட தனால்தான் இப் பொழுது (சில முத்திரைகள் தவிர) அவர் கள் எழுத்துகள் கிடைத்தில என்க.
ரிக்வேதம் முதலிய ஆரிய வேதங் களிலும் பிறவற்றிலும் தமிழ்ச்சான்றோர் ஆரிய மொழியில் இயற்றிச் சேர்த்த பகுதி களும் விரவியுள்ளன என்பதை மறைமலை யடிகள் “வேளாளர் நாகரிகம் “” 10ஆம் இயலில் விளக்கினார்.
அறிஞர் செண் டுகே இக் கருத்தையும் விரிவாக ஆதரிக் கிறார். ரிக்வேதத்தில் இயற்கைத் தெய் வங்களை வருணிக்கும் பகுதிகள் பல வேத மொழியல்லாத (அசுரர்) மொழியில் அறிவர் களால் எழுதப்பட்டு இருந்திருக்க வேண் டும். பின்னர் அவையோ அவற்றின் தழு வல்களோ வேத ஆரிய மொழியில் எழுதப் பட்டு ரிக்வேதத்தோடு சேர்க்கப்பட்டு இருக்கவேண்டும். சப்தரிஷிகளுமே அத்தகைய அறிவர்களாக இருக்கக் கூடும். “அசுரர்கள்: வேத ஆரியத்தில் நேரடி யாகவும் சில பாடல்கள் எழுதிச் சேர்த்தி ருக்கக் கூடும். அக்கால கட்டத்தில் வேத மொழியில் சேர்ந்த பழைய (ஆரியமல்லாத) மொழிச் சொற்களுக்கான பொருள் காலப் போக்கில் மறந்துவிட்டதனால் அவற்றை விளக்க நிகண்டுகள் முதலியவற்றையே நம்ப வேண்டியதாயிற்று. பிற்கால வினக் கங்களில் சரியானவை சில ; தவறான கற் பனைப்பொருள் விளக்கங்களும் பல என்ற நிலைமை உருவாகியது.
தமிழர் தொல் வரலாறு பற்றியும் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றியும் ஆய்வு செய்பவர்கள் கருவி நூலாகக் கருத்துடன் பயிலத் தக்கது அறிஞர் செண்டுகே அம் மையாருடைய “நாகரிக அசுரர்கள்-ரிக் வேதத்தில் ஹரப்பா மக்கள்” என்னும் நூலாகும்.
நன்றி : செந்தமிழ்ச்செல்வி, (1986-மார்ச் இதழ்)