அரூர் கழக மாவட்டம், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் கட்டரசம்பட்டி ராமச்சந்திரனின் தந்தையார் இராஜி (வயது 60) 13-10-2024 அன்று விபத்து ஒன்றில் மறைவுற்றார். தருமபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் மற்றும் தோழர்கள் மாலை வைத்து வீரவணக்கம் முழக்க மிட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
சொந்த ஊரான கட்டரசம்பட்டியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட கழக துணை செயலாளர் வழக்குரைஞர் ரே.வடிவேலன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் என்.டி.குமரேசன், ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் சிவராஜ், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் செ. தீர்த்தகிரி, வேப்பம்பட்டி தோழர் பகலவன், மற்றும் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களும் கலந்துகொண்டு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.