கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.10.2024

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை

மகாராட்டிரா தேர்தலில் ஓபிசி பிரிவினர் வாக்குகளை கவர பாஜக முனைப்பு.

தி இந்து

2024 ஆம் ஆண்டின் உலகளாவிய பசி குறியீட்டில் 127 நாடுகளில் இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் சுகாதார பாதுகாப்பின் தோல்வியை இது காட்டுகிறது என்கிறது தலையங்க செய்தி.

டைம்ஸ் ஆப் இந்தியா

மகாராட்டிரா தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த பிறகு வழங்கப்பட்ட குறைந்தபட்சம் 112 அரசுத் தீர்மானங்களை (ஜிஆர்) திரும்பப் பெற்றது. மகாராட்டிரா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட ஒப்பந்தக் கோரல் குறித்து தலைமைத் தேர்தல் அலுவலகம் எழுப்பிய கேள்விகளை தொடர்ந்து மகாராட்டிரா அரசு அதை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிசினஸ் டுடே

இந்தியா-கனடா இடையே மோதல்: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும், இந்திய தூதர்களுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்க வேண்டும் என புதிய ஜனநாயக கட்சி (என்டிபி) தலைவர் ஜக்மீத் சிங் வேண்டுகோள்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *