மற்றும், அமைப்புக் கூட்டங்களை நடத்திட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மன்னார்குடி, அக். 17- மன்னார் குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துரையால் கூட்டம் 14-10-2024 அன்று இரவு 7.30 மணியளவில் மன்னார்குடி பெரியார் படிப்ப கத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். கழக கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் கூட்ட நோக்கம் குறித்து உரையாற்றினார். மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்செல்வன், நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் தங்க.பிச்சைக் கண்ணு, கோட்டூர் ஒன்றியத் தலைவர் குமார், நல்லிக் கோட்டை நல்லத்தம்பி, மாவட்ட ப.க. துணைச்செயலாளர் முரளி மாவட்ட ப.க. துணைத்தலைவர் கோபால், அறிவானந்தம், மன்னை அழகேசன், மணிகண்டன், மாவட்ட துணைச்செயலாளர் புஸ்பநாதன், கழக பேச்சாளர் இராம.அன்பழகன், கருத்துரை யாற்றினர்.
கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் தலைமைச்செயற்குழ முடிவுகள் மற்றும் ஆசிரியர் அவர்களின் அனுகுமுறையால் கழக தோழர்களுக்கும் கழக தோழர்களுக்கு ஏற்பட்டுள்ள மரியாதை இவற்றை பயன்படுத்தி இக்க பிரச்சார கூட்டங்களை பெருமளவில் நடத்திட வேண்டும் என தனது உயில் குறிப்பிட்டார்.
கூட்டத்தில், கடந்த 6.10.2024 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும்,
2024 நவம்பர் 26 அன்று ஈரோட்டில் நடைபெறும் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டில் கோட்டூர், நீடாமங்கலம் மன்னார்குடி, ஒன்றிய , நகர திராவிடர் கழகம் சார்பில் தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது எனவும்,
மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம் ஒன்றியத்தில் திராவிடர் கழகம், இளைஞர் அணி, மாணவர் கழக அமைப்பை வலுப்படுத்தும் வகையில் கழக அமைப்பு உள்ள கிராமங்களில் அமைப்பு கூட்டங்களை நடத்தி அமைப்புகளை புதுப்பித்து அறிவிப்பது கிராமங்களில் கிராமப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது கழகக் கொடியேற்றுவது எனவும் முதற்கட்டமாக மாதம் இரண்டு கிராமத்தில் கழகக் கொடியேற்றி பொதுக் கூட்டத்தை நடத்துவதெனவும் மன்னார்குடி நகரத்தில் மாதம் 2 கூட்டங்கள் நடத்திட முடிவு செய்யப்படுகிறது எனவும்,
10 வயதில் மேடை ஏறி 91 வயதில் 81 ஆண்டு பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் உலகம் பெரியார் மயம் பெரியார் உலக மயம் என்ற முழக்கத்தை முன்வைத்து நாளும் உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை டிசம்பர் முதல் வாரத்தில் பட்டுக்கோட்டை நகரில் தோழமை இயக்க பொறுப்பா ளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடத்துவதெனவும் மாதம் ஒரு முறை பெரியார் பேசுகிறார் நிகழ்வை அரங்க கூட்டமாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.