கருநாடக உயர்நீதி மன்றத்திலிருந்து வரும் நீதிபதிகள், நீதிமன்றத்தில் உதிர்க்கும் வாய்ச் சொற்கள் – அதுபோல, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் ஒருவரை – அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரைப்பற்றி தேவையற்ற – கடுமையான வார்த்தை அபிஷேகங்களைச் செய்து, வெடித்து, அதை அவர் திரும்பப் பெற்றார்.
கருநாடகத்தில் ஒரு மகளிர் வழக்கொன்றில், ஒரு நீதிபதி உதிர்த்த தரம் தாழ்ந்த கருத்துகளுக்கு, அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டிய நிலை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் சிலைபற்றிய வழக்கில், சிறீரங்கம் சிலை பீடத்தில் இல்லாத வாசகங்களை இருப்பதாக எண்ணி, வழக்கில் தீர்ப்பு தந்து – நீதிமன்றத்தில் பல சொற்களைக் கூறியதாக ஆங்கில நாளேடு வெளியிட்ட கருத்துகள் போன்ற போக்கு, உயர்நீதிமன்றங்களின் மாண்புக்கு எதிரானதும், நீதியை பாதிக்கும் வகையில்– தீர்ப்புகளை வழங்க நீதிபதிகளுக்கு முழு உரிமை இல்லாதவற்றை எழுதுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதா?
நீதிப் போக்கு இப்படிப் பல உயர்நீதிமன்றங்களில் நிகழ்ந்தால், அது, நீதித்துறையின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கவே செய்யும் என்பதால், விருப்பு, வெறுப்பற்றுக் கடமையாற்ற, அவர்கள் பதவியேற்றபோது கூறிய பிரமாண வாசகங்களை மீறுவது, அவர்களுக்கும் பெருமையல்ல; உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற மாண்புகளையும் உயர்த்தாது என்பதைக் கவனத்தில் கொண்டு, நடப்பது மிகவும் அவசியம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
17.10.2024