ஜெயக்கொண்டம், அக்.16 கராத்தே பாட வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பிரதீப்குமார், வெற்றிச்செல்வன், மற்றும் பிரனேஷ் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
ரோட்டரி கிளப், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் வீர விளையாட்டு கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டிகள் 13.10.2024 அன்று தஞ்சாவூர் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
இதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி வீரர் த.பிரதீப்குமார் ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த இவர் 35-40 கிலோ எடைப் பிரிவு சண்டைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், கட்டா போட்டியில் மூன்றாம் இடத்தையும், ஆறாம் வகுப்பைச் சேர்ந்த அ.வெற்றிச்செல்வன் 35-40 கிலோ எடை பிரிவு சண்டை போட்டிகளில் இரண்டாம் இடத்தையும், கட்டா போட்டியில் மூன்றாம் இடத்தையும், நான்காம் வகுப்பைச் சேர்ந்த
மு. பிரனேஷ் 21 – 25 கிலோ எடை பிரிவு சண்டை மற்றும் கட்டா போட்டியில் மூன் றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த கராத்தே மாஸ்டர் வினோத் ஆகியோர்களுக்கு பள்ளி முதல்வர் பாராட்டுகளை தெரிவித்தார்.