புதுடில்லி, அக்.16 வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து விதிகளின்படி, வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய ராகுல், ரேபரேலியைத் தக்கவைத்தார்.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் நவ. 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடை பெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூா்வ அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவா் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (15.10.2024) வெளியிட்டார். இதன்மூலம், தோ்தலில் முதன் முறையாக பிரியங்கா காந்தி களமிறங்கியிருக்கிறார்.