விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த பா.வில்லவன்கோதை – பொற்செல்வி ஆகியோர் மகன் வி.திலீபனுக்கும், திருவாரூர் மாவட்டம் பாவட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் – மாரியம்மாள் ஆகியோரின் மகள் கா.சித்திரைச் செல்விக்கும், இன்று (16.10.2024)காலை 12 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை நாகம்மையார் அரங்கில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி, தா. தம்பி பிரபாகரன், திண்டிவனம் மாவட்டத் தலைவர் இரா.அன்பரசன், ஆசிரியர் நவ.ஏழுமலை, திண்டிவனம் தோழர்கள் எ.பெருமாள், உ.பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாப்பிள்ளையின் பெற்றோர் பா.வில்லவன்கோதை – பொற்செல்வி, ”பெரியார் உலகம் வளர்ச்சி நிதி”யாக ரூபாய் 10,000/- (ரூபாய் பத்தாயிரம்) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற எளிய திருமணம்
Leave a Comment