சென்னை, அக்.16- சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப் பாட்டு மய்யத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று கூறும்போது, ‘வானிலை ஆய்வு மய்யத்துடன் 24 மணிநேரமும் தொடர்பில் இருந்து வருகிறோம்.
எங்கே, எப்போது, எவ்வளவு மழை பெய்யும் என்ற தகவல்களை பெற்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கும் வேலையை சரியாக செய்து வருகிறோம்.
3 நாள்களுக்கு மழை பெய்யும் என்று கூறப் பட்ட நிலையில் 10 நாள் களுக்கு தேவையான பொருள்களை பொது மக்கள் வாங்குகின்றனர்.
அவ்வாறு வாங்குவ தால் பிறருக்கு பொருள்கள் கிடைக்காமல் போகிறது. எனவே 10 நாட்களுக்கு தேவை இல்லை. மூன்று நாள்களில் மழை நிற்கப் போகிறது. மூன்று நாள்க ளுக்கு தேவையான பொருட்களை குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களை மட்டும் வாங்குங்கள்.
குழந்தைகளுக்கு வேண்டிய பால் எங்கும் தட்டுப்பாடு வரக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அதேபோல் கர்ப் பிணிகளுக்கு வேண்டிய உதவிகளும் செய்து தரப் பட்டு உள்ளது. காய்கறிகளில் தக்காளி தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறினாலும், தேவைக்கு மட்டும் பொருள்களை பொதுமக்கள் வாங்க வேணடும்’ என்றார்.
தமிழ்நாட்டில் கன மழை எச்சரிக்கை குறித்து, மாநில நிவாரண ஆணையர், ராஜேஷ் லக்கானி கூறும்போது, “காலை 8.30 மணி முதல், சென்னையில் சில பகுதிகளில், 16 சென்டி மீட்டர் என்ற அளவில் மழை பெய்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் 5 கடலோர மாவட்டங்களில் பணிய மர்த்தப்பட்டு உள்ளனர்.
சென்னையில் சுமார் 300 நிவாரண மய்யங்களை அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து முதி யோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் அடுத்த 10 நாட்களுக்கு தேவையான உலர் உணவு பொருள்களை கையிருப்பு வைத்திருப்பதையும் உறுதி செய்துள்ளோம்.
அதே போல் பிரசவ தேதி நெருங்கிய நிலையில் 80 கர்ப் பிணிகள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.