சென்னை, அக். 16- தோழர் செந்தமிழ் சேகுவேரா உடலுக்கு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் நேரில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
கடந்த சனிக்கிழமை (12.10.2024) அன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட பூமி நிலா சுழற்சி, பெயர்ச்சி பேரவை நிறுவனர் செந்தமிழ் சேகுவேரா சிகிச்சை பலனின்றி 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு காலமானார். அன்னாருக்கு 14.10.2024 திங்கள் கிழமை அன்று மதியம் 12 மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனையில் திராவிடர் கழகம் சார்பில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.
அறிவியல் அறிஞர் சித்து முருகானந்தம், பசுமை நல படிப்பகம் தாயுமானவர், பகுத்தறிவு பாடகர் பாவலர் கீர்த்தி, உடுமலை வடிவேல், மடிப்பாக்கம் அரசு, ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை, தமிழாசிரியர் மலர், வினவு பகவதி, நாகராஜன் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
இறுதியாக திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தி, அறிவியல் மனப்பான்மையை வாழ்வியல் நெறியாகவே கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர், மற்றவர்களுக்கும் பரப்பியவர் என்று புகழாரம் சூட்டி உரையாற்றினர். பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் இரங்கலுரைக்கு முன்பாக குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து பூமி நிலா சுழற்சி பெயர்ச்சி பேரவை நிறுவனர் சேகுவேராவின் உடலுக்கு கழகக் கொடியை போர்த்தி மரியாதை செய்தார். தோழர்கள் வீரவணக்க முழக்கங்கள் எழுப்பினர்.
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய இரங் கல் அறிக்கையை க.கலைமணி கூட்டத் தினரிடையே வாசித்தார்.
பிற்பகல் 1 மணியளவில் செந்தமிழ் சேகுவேரா அவர்களின் உடல் அவரது குடும்பத்தினரால் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக உடற்கொடை அளிக்கப்பட்டது.
சேகுவேரா குடும்பத்தினர், உறவினர் மற்றும் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் அ. வெங்கடேசன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தைய்யன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன், முத்துலட்சுமி, உத்ரா, மரகதமணி, அரும்பாக்கம் தாமோதரன், கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ. சுரேஷ், வழக்குரைஞர் வேலவன், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, ஒளிப்படக் கலைஞர் நிலவன், கலைமணி, ஆவடி மாவட்ட துணைத் தலைவர் வை.கலையரசன், வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தோழர் ரவிக்குமார், தாம்பரம் நகரச் செயலாளர் மோகன்ராஜ், குணசேகரன், படப்பை கருப்பையா, கிசோர், கண்மணி கண்ணாடிக் கடை துரை, பூவை தமிழ்ச்செல்வன், சசிகுமார் (எ) சகா, எம்.கே.பி.நகர் லாரன்ஸ், பெரம்பலூர் செல்வகுமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு செந்தமிழ் சேகுவேரா உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.