சேலம், அக்.16- சேலம் மாவட்டம் மேச்சேரியில் நேற்று (15.10.2024) நெசவாளர் களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மேச்சேரியில் நெசவாளர்களை சந்தித்து பேசியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.
நெசவாளர்கள் மீது பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள் ளார். நெசவாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும். கைத்தறி நெசவாளர்களின் திறமை மிகவும் வியப்பளிக்கிறது.வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
அதற்கு ஏற்ற வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது.
எதிர்பார்த்ததைப் போல அடுத்த 2 நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்.
– இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.