சென்னை,அக்.16 வடக்கிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலே தமிழ்நாட்டில் உள்ள 799 நீர்நிலைகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று (15.10.2024) தொடங்கியது. சென்னை 90 மி.மீ., திருவள்ளூரில் 100 மி.மீ., மற்ற இடங்களில் 70 முதல் 80 மி.மீ. மழை பெய்துள்ளது. நேற்றைய நிலவரம் படி வடதமிழ்நாட்டில் சராசரியாக 150 மி.மீ. மழை பெய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரை இயல்பைவிட 84 சதவீதம் மழை பெய்துள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,134 பாசன ஏரிகளில் 799 பாசன ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக, 1,637 ஏரிகள் 75 விழுக்காடு கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2045 மில்லியன் கனஅடியாக உள்ளது.
விண்வெளியில்
சுனிதா வில்லியம்ஸை மீட்கச் செல்லும்
டிராகன் விண்கலம்!
நாசா, அக்.16 ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால் விண்வெளி மய்யத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகி யோரை மீட்க டிராகன் விண்கலத்தை நாசா விண்ணில் ஏவுகிறது.
அமெரிக்காவின் தனியாா் நிறு வனமான போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி பன்னாட்டு விண்வெளி மய்யத்திற்குச் சென்றனர்.
ஜூன் 14 ஆம் தேதி அவர்கள் திரும்பவிருந்த நிலையில், ஸ்டார் லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர்கள் விண்வெளியில் இருக்கின்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.