புதுடில்லி, அக்.15- வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்றக்குழு கூட்டத்தை பல்வேறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித் தனர்.
வக்பு வாரியத்தின் பணிகளை நெறிப்படுத் தவும், வக்பு சொத்துகளின் நிர்வாகத்தை மேம்படுத் தவும் ஒன்றிய அரசு ஏற்கெனவே உள்ள வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா ஒன்றை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்காக பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மசோதா தொடர்பாக ஆய்வு செய்து வரும் இந்த குழு, நேற்று (14.10.2024) மீண்டும் கூடியது. இதில் பங்கேற்பதற்காக குழுவின் உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
இந்த கூட்டம் தொடங்கியதும், அது விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி நடைபெறவில்லை எனக் கூறி பல எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பி னர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கவுரவ் கோகாய், இம்ரான் மசூத் மற்றும் ஆராசா (தி.மு.க), அரவிந்த் சாவந்த் (உத் தவ் சிவசேனா), அசாதுதீன் ஓவைசி (மஜ்லிஸ் கட்சி), மொகிபுல்லா (சமாஜ் வாடி), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி) ஆகியோர் வெளியேறினர். கமிட்டி முன்பு ஆஜரான ஒருவர், மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த எதிர்க ்கட்சித் தலைவர்களுக்கு எதிராக தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை தெரி விக்க கமிட்டி அனு மதித்ததாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பின்னர் செய்தியாளர்களிடம் தெரி வித்தனர்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்gள் பின்னர் தனியாக கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் தங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.
அப்போது இந்த கூட்டுக்குழுவின் செயல்பாடுகள் குறித்து மக்களவை சபாநாயகரிடம் தெரிவிக்கலாம் என ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.
இதற்கிடையே எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெளி யேறியபோதும், ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் தொடர்ந்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
வக்பு வாரிய மசோதா தொடர்பாக அமைக்கப் பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவை எதிர்க் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்தது ஒன்றிய அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.