கடந்த ஆண்டு (2022) பொன் விழா கொண்டாடிய விஜயா மருத்துவமனை, பி.நாகிரெட்டி, அவர் களால் 1972இல் ‘ஆரோக்கியமான சமுதாயத்திற்கான தன்னல மற்ற சேவை’ என்ற பார்வையுடன் நிறுவப் பட்டது.
2003இல் தொடங்கப்பட்ட உலக ளாவிய முன் முயற்சியின் உயர் தரத்தை பூர்த்தி செய்து அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பதை ஆதரித்து “குழந்தை நட்பு மருத்துவமனை” சான்று பெற்றது(WHO, UNICEF). மார்ச் 2014இல், விஜயா மருத்துவமனை தென்னிந்தியாவின் முதல் “தாய்ப் பால் வங்கி”யை தொடங்கியது.
பிறந்த குழந்தை பிரிவுகளில் குறைப் பிரசவ மற்றும் நோய் வாய்ப் பட்ட தீவிர சிகிச்சை தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு கண்டிப் பாக தாய்ப்பால் அவசியமாகிறது.
VMET நிர்வாக அறங்காவலர் சிறீமதி பாரதி ரெட்டி தளராத ஆர்வம் மற்றும் விடாமுயற்சி வழிகாட்டுதலின் கீழ், பச்சிளம் குழந்தை நலனுக்காக “தாய்ப்பால் – குழந்தையின் உரிமை” கருத்தரங்கு நடைபெற்றது. தாய்ப் பால் குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து; குழந்தைகளுக்கான ஒரு தன்னிகரற்ற உணவும் கூட என எடுத்துரைத்தார்.
சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதா கிருஷ்ணன் திறந்து “தாய்ப்பால் என்பது தாய்க்கும் சேய்க்குமான ஒரு உறவுப் பாலம் என்றே சொல்லலாம்” என்று கூறினார்.
உலக தாய்ப்பால் வாரம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கொண்டாடப் படுகிறது. இதன் நோக்கம், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தவும், தாய்ப்பாலின் முக்கியத்துவம், உன்னதம் குறித்து எடுத்துரைக்கும் வகையிலும் உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப் பால் வாரத்தை கடைப்பிடிக்கிறது.
“தாய்ப்பால் வங்கியை எவ்வாறு ஒரு மருத்துவமனையில் அமைப்பது” என்பது குறித்து வழி காட்டுதல்கள் கருத்தரங்கில் அளிக் கப்பட்டது.
“தாய்ப்பால், ஒவ்வொரு குழந்தை யின் உரிமை, அதனை எப்படி செயல்படுத்துவது ” என்பது இந்த கருத்தரங்கின் ஒரு முக்கிய அம்ச மாகும்.