கழக துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரை!
கடத்தூர், அக். 15- அரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் -அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் 25.9.2024ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் த.மு.யாழ் திலீபன் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பெ.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் மு.பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அ. இளங்கோ, த.முருகம்மாள், தர்மபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் க. பொன்முடி, தர்மபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கதிர் செந்தில்,ஒன்றிய திராவிடர் கழக தலைவர் பெ.சிவலிங்கம், நகர செயலாளர் இரா. நெடுமிடல், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கோ.குபேந்திரன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் சோ.பாண்டியன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜ், நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ம.சரவணன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் கே.ஆர். சி. தங்கராஜ், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் இ. சமரசம் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரையாற்றினார், மாநிலக் கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. இராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலையா, சிபிஎம் கட்சியின் வட்ட செயலாளர் தனுசன், மதிமுக பொறுப்பாளர் க.தி.சங்கர், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர். ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரைப் பற்றி ஒப்பீடு செய்து திராவிட இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், திராவிட இயக்கத்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள், பார்ப்பனர்களால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு, சமூக நீதியில் தமிழ்நாடு முதலிடம், மூடநம்பிக்கையை விதைத்து பார்ப்பனர்கள் வாழும் முறை குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கவிஞர் கீரை பிரபாகரன், தர்மபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, அமைப்பாளர் அன்பரசன், மாரவாடி ஊமை காந்தி, தருமபுரி மாவட்ட துணைத் தலைவர் இ.மாதன், தர்மபுரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ், சுந்தரம், தமிழ்ச்செல்வி நெடுமிடல், சிந்தல்பாடி பச்சையப்பன், அம்பை முருகன், ஆதிமூலம், விசிக பொறுப்பாளர் மாயவன், வேப்பிலைப்பட்டி திராவிட மாணவர் கழக தோழர்கள் சூர்யா, செம்மனஅள்ளி சுந்தர்ராஜன், மகளிர் அணி கலா, சுசீலா, காஞ்சனா, விஜயா, வேப்பிலைப்பட்டி திமுக தோழர்கள் தமிழரசன், அமுல் செல்வம், கணேசன், வேணுகோபால், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திராவிட் மாணவர் கழகத் தோழர் கு.அரிகரன் நன்றி கூறினார்.