வை.செல்வராஜ் எம்.பி. வழங்கினார்
திருவாரூர், அக். 15- திருவாரூரில் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் மற்றும் அறிஞர் அண்ணா 116ஆவது பிறந்தநாள் பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரங்க.ஈவேரா தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மேனாள் மாவட்டத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ் ணமூர்த்தி, மாவட்டச் செயலா ளர் சவு.சுரேஷ், மாநில விவ சாய தொழிலாளர் அணி செயலாளர் வீர.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சொற்பொழிவாளர் தேவ.நர்மதா தொடக்க உரையாற் றினார். கோ. செந்தமிழ்ச்செல்வி இணைப்புரை வழங்கினார். பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் பரிசுகள் வழங்கினார். போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன், சொற்பொழிவாளர் மாங்காடு மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் அருண்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மதிமுக துணை கொள்கைபரப்பு செயலாளர் ஆரூர் சீனிவாசன், கழகத்தின் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் வீரையன், மாவட்ட துணைச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் நேரு, மாவட்ட மகளிர் அணி தலைவர் மகேசுவரி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மண்டோதரி, திருவாரூர் ஒன்றியத் தலைவர் கவுதமன், ஒன்றிய செயலாளர் கண்ணதாசன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், குடவாசல் ஒன்றியத் தலைவர் அசோக்ராஜ், ஒன்றியச் செயலாளர் அம்பேத்கர், நன்னிலம் ஒன்றியத் தலைவர் தன்ராஜ், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் சித்தார்த்தன், கொரடாச்சேரி ஒன்றியத் தலைவர் ஏகாம்பரம், திருவாரூர் நகரத் தலைவர் சிவராமன், நகரச் செயலாளர் ஆறுமுகம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவர் பொன்முடி, மாவட்ட இளைஞரணித் தலைவர் பிளாட்டோ, பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் நன்னிலம் ஒன்றியத் தலைவர் கரிகாலன், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், கழக முன்னோடிகள் ஆத்ம நாபன், பாலச்சந்தர், குபேந்திரன், செல்வகுமார், செல்வேந்திரன், நன்னிலம் அன்பு மற்றும் தமிழ்மணி உள்ளிட்டோர் கலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் பாடல் பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். மேலும் அவர் பேசிய போது, நாடாளுமன்றத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவேன் என்று தெரிவித்தார். டெல்டா பகுதியில் பொதுமக்கள் பயணிகள் பயன்படுத்தும் வகையில் கூடுதல் ரயில் சேவை அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.