ஊற்றங்கரை, அக். 15– காரப்பட்டு ப.இரமேசு இல்லத்தில் 22.09.2024 அன்று மாலை 3.00 மணியளவில் ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், வழக்குரைஞர் ந.ஜெயசீலன், மேனாள் ப.க.பொறுப்பாளர் சித.அருள், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், ஒன்றிய ப.க.தலைவர் இராம சகாதேவன், கீழ்மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட ப.க.துணைச் செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராசேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், காரப்பட்டு ப.இரமேசு, எ.அருணகிரி, எஸ். அண்ணாமலை, என்.கோகுல், எஸ்.சஞ்சை, எம்.நிரஞ்சன், லிங்கேஸ்வரன், எம்.இரவிவர்மா, சி.தினேஷ், சி.சந்திரன், கே.டி. மாணிக்கவுதம், கோ.பிரகாஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துக்கொண்டனர். இறுதியாக ப.இரஜினி நன்றி
கூறினார்.
புதிய நிர்வாகிகள்
நியமனம்
ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகத்துணைத் தலைவராக காரப் பட்டு ப.இரமேசு, காரப்பட்டு கிளைக் கழக நிர்வாகிகள். கிளைத் தலைவர் எ.அருணகிரி, செயலாளர் என்.கோகுல், துணைத் தலைவர் ப.ரஜினி, துணைச்செயலாளர் எம்.ரவிவர்மா, கிளைக்கழக ப.க.தலைவர் எஸ்.அண்ணா மலை ஆகியோர்களை மாவட்ட கழக பரிந்துரையுடன் புதிய கழக நிர்வாகிகளாக தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் அறிவித்தார்.