பெரம்பலூர், அக்.15 பெரம்பலூர் மாவட்டத்தில் ‘‘பெரியார் பேசுகிறார்’’ என்னும் நிகழ்வின் 2 ஆவது மாதாந்திர கூட்டம் பெரம்பலூர் நகரத்தலைவர் ஆறுமுகம் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி தலைவர் கு.குணகோமதி ‘‘பெரியார் இல்லத்துப் பெண்கள்’’ என்னும் தலைப்பில் பேசினார். மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமையில் மாவட்ட செயலாளர் விசயேந்திரன் வரவேற்க, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நன்றிகூற, தேநீருடன் கூட்டம் நிறைவுபெற்றது.