கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்ற
ஈரோடு மாவட்டக் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஈரோடு, அக்.15– ஈரோடு மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 11.10.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் நோக்க உரையாற்றி னார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
2024 நவம்பர் 26 அன்று ஜாதி ஒழிப்பு போராட்ட நாளைமுன்னிட்டு ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாநாட்டை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கிய கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறது.
காலையில் கருத்தரங்கம் சுயமரியாதை இயக்கக்கண்காட்சி மாலையில் மாபெரும் பேரணியுடன் இரவு பொது வெளி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுடன் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டை மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
மாநாட்டை விளக்கி சுவரெ ழுத்து விளம்பரம், உள்ளூர் தொலைக்காட்சி யில் விளம்பரம் சுவரொட்டி விளம்பரம் தெரு முனைக் கூட்டங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை மிகச் சிறப்பாக செய்வதுடன் மாநாடு சிறப்பாக நடைபெற நிதி வசூல் குழு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தோழர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
மாநாட்டு நன்கொடை வசூல் குழு – ஈரோடு த சண்முகம், இரா. நற்கு ணன், பேராசிரியர் ப.காளிமுத்து, கோ.பாலகிருட்டினன், மா.மணிமாறன், கு.சிற்றரசு, அனிச்சம் கனிமொழி, இளையகோபால், தே.காமராஜ், ப.சத்தியமூர்த்தி, து. நல்லசிவம், கோ. திருநாவுக்கரசு, தாண்டாம் பாளையம் அன்பரசு, நா.கிருட்டிணமூர்த்தி,
கடைவீதி வசூல் குழு – சிவகிரி கு.சண்முகம், ந.மோகன்ராஜ் சசிதரன், அன்பு பிரசாத், தமிழ் செல்வன், பாஸ்கர், பள்ளிபாளையம் பொன்னுசாமி, தங்கராஜ், கி. பிரபு, ராஜேஸ்வரி, விளம்பரக்குழு – ஜெபராஜ் செல்லத்துரை, பவானி அசோக் குமார், பி.என்.எம்.பெரியசாமி, மதிவாணன், நா.கண்ணம்மா, ஊர்வல ஒருங்கிணைப்புக் குழு – ஜெயச்சந்திரன், பார்த்திபன், செ பிரகாசன், கு.மணிமாறன், ஆசிரியர் பாலசுப்பிரமணியன், கவுசிக், வீ.தேவ ராஜ்.
அக்டோபர் 26, 27 ஆகிய நாள்களில் கோபி கழக மாவட்டத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மற்றும் கைவல்யம் தொண்டறச் சிறப்பு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரும் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து இளைஞர்கள் மாணவர்களை பெரு மளவில் பங்கேற்கச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டுக் குழு – கூட்டத்திற்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் ஈரோடு மாவட்டக் கழகத் தலைவர் நற்குணன் மாவட்ட செயலாளர் மா. மணிமாறன், கோபி மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன், கோபி மாவட்ட கழக காப்பாளர் ந. சிவலிங்கம், ஈரோடு மாவட்ட காப்பாளர் சிவ கிரி கு.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், கு சிற்றரசு, மருத்துவர் தமிழ்க்கொடி எம்டி, மாநகர தலைவர் திருநாவுக்கரசு, மாநகர செயலாளர் தே.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் வீ.தேவராஜ், மாநில மாணவர் கழக துணை செயலாளர் சிவபாரதி, கோபி மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா, ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.மோகன்ராஜ், இளைஞரணி சேர்ந்த அன்பு பிரசாத், சசிதரன், பவானிஅசோக்குமார்,செபராஜ் செல்லத்துரை, பெரியார் பிஞ்சு அன்பெழில், தாண்டாம்பாளையம் அன்பரசு, தங்கராசு, நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் க.பொன்னுசாமி, சிவக்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தமிழ்க்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளைக் கூறினர்.
முன்னதாக கழகப் பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் அரங்கக் கூட்டம் மற்றும் திறந்த வெளி மாநாடு நடைபெறவுள்ள இடங்களைப் பார்வையிட்டார்.