டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக் காவை சேர்ந்த பொருளாதார ஆய்வாளர்கள் டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். சில நாடுகள் செழிப்பாகவும், சில நாடுகள் பொருளாதாரத்தில் தோல்வி அடைவது குறித்தும் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வக்ஃப் (திருத்த) மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்டியதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்தனர்.
தி இந்து:
*’மேக் இன் இந்தியா’ தொடங்கப்பட்ட நேரத்தில் மோடி அரசாங்கத்தால் உச்சரிக்கப்பட்ட நோக்கங்கள் “ஜூம்லாக்கள்” என்று மாறிவிட்டதாகவும், “மேக் இன் இந்தியா” வெறுமனே பேக் இன் இந்தியா’வாக மாறி விட்டது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*“பாஜக-ஆர்எஸ்எஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், அவர்களது வேலை இங்கே – தமிழ்நாட்டில் பலிக்கவில்லை என்பதை கடந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டினார்கள் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேச்சு.
– குடந்தை கருணா