தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நேற்று (14.10.2024) நள்ளிரவு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை பெருநகர மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம் ஜானி ஜான்கான் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் மழை நீரகற்றுதல் உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் களப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி உணவுப் பொருட்களை வழங்கினார். உடன் ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழு தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு மற்றும அலுவலர்கள் உடனிருந்தனர்.