டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ராணுவத்தினருக்கான சலுகைகள் அக்னி வீரர்களுக்கு கிடைக்காதது ஏன்? ஒரு ராணுவ வீரரின் உயிர் இன்னொரு ராணுவ வீரரின் உயிரை விட ஏன் மதிப்புமிக்கது? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி அமைத்திடுவதால், தற்போது உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இஸ்ரேல்-லெபனான் எல்லையில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து கவலை தெரிவித்த ஒரு நாள் கழித்து, இந்தியா 12.10.2024 அன்று லெபனானில் உள்ள அய்.நா. இடைக்காலப் படையில் (UNIFIL) துருப்புகளை பங்களிக்கும் நாடுகளுடன் இணைந்து, இரண்டு அய்.நா அமைதிப்படைகளை காயப்படுத்திய இஸ்ரேலிய இராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிரான கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிரா எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி ஆளும் கட்சியான ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்திற்கு எதிராக “கத்தரஞ்ச பஞ்சநாமா” (துரோகிகளின் ஆதார பதிவு) என்ற ஆவணத்தை வெளியிட்டது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கார்ப்பரேட்டர்களை வாங்குதல், அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்தல், அரசு வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பிற ஊழல்களுக்கான மாநில அரசின் கட்டண அட்டையை ‘பஞ்சநாமா’ பட்டியலிடுகிறது என்று எம்.வி.ஏ தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தி ஹிந்து:
* டில்லி பல்கலைக்கழக மேனாள் பேராசிரியரும் ஆர்வலருமான ஜி.என் சாய்பாபா மறைவுக்கு இரங்கல். சாய்பாபா, நரேந்திர மோடி அரசின் அடக்குமுறை கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர் என்றும், அவரது மரணத்திற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் இடதுசாரி கட்சிகள் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
*பஞ்சாப் விவசாயிகள் தாமதமாகும் நெல் கொள்முதலை கண்டித்து சாலைகள், ரயில் பாதைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
– குடந்தை கருணா