தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர்

viduthalai
9 Min Read

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அதன் விவரம் வருமாறு:

தாராபுரம்

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் பெரியார் திடலை பராமரிப்புப் பணிகள் செய்து திடலை சுற்றியுள்ள சுவர்களில் அய்யாவின் வாசங்களை எழுதி மின்விளக்குகள் புதிதாக அமைத்தும் திடலை மேம்படுத்தப்பட்டுள்ளது மேற்படி திடலுக்கு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நகர தந்தை பாப்பு கண்ணன், பத்தாயிரமும் தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ் வி செந்தில் குமார் வழக்குரைஞர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம் மேனாள் வங்கி மேலாளர் பரமசிவம் வழக்குரைஞர்கள் கலைசெழியன் , ராஜேந்திர பாபு , குமார், நகரத்தலைவர் சின்னப்ப தாஸ் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் ஓவியர் முருகேசன் ஆகியோரின்‌ ஒத்துழைப்போடு சிறப்பாக சீர் செய்யப்பட்டு கடந்த செப் 17ஆம் தேதி அய்யாவின் பிறந்தநாளில் குருதிக்கொடை அளிப்பு கழக கொடியை மகளிரணி தோழர் ஜெகன் ஏற்றினார் தோழர்கள் ப.க. செயலாளர் வெங்கடாச்சலம், தொழிலாளர் அணி இளைஞர் அணி மாணவர் அணி என தோழர்கள் கலந்து கொண்டனர். மேலும் திமுக, விசிக, ஆதித்தமிழர்பேரவை, தமிழ் புலிகள் தமிழகவெற்றிக்கழகம் என 500 மேற்பட்ட தோழர்கள் தந்தை பெரியார் பிறந்தநாள் உறுதிமொழி ஏற்றனர்.

சேலம்

தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 17/09/2024 அன்று காலை 9 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு, மாவட்ட காப்பாளர் கி.ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டச் செயலாளர் சி.பூபதி, மாநகர் தலைவர் அரங்க இளவரசன், மாநகர செயலாளர் இராவண பூபதி, சூரமங்கலம் பகுதி தலைவர் பழ.பரமசிவம், செயலாளர் போலீஸ் ராஜு, பொதுக்குழு உறுப்பினர் கமலம், அம்மாபேட்டை பகுதி தலைவர் குமாரதாசன், செயலாளர் இமய வரம்பன், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் மணிமாறன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.இ.தமிழர் தலைவர், மேட்டூர் முத்து ராணி, பா. வைரம், தொழிலாளர் அணி தலைவர் கணேசன், நெய்வேலி லட்சுமி, மேச்சேரி அண்ணாதுரை, உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் தாதகாப்பட்டி, கருங்கல்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம் பகுதிகளில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்னை அண்ணா மேம்பாலம்

அண்ணா மேம்பாலத்தின் இடையில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு 17.09.2024 அன்று காலை 10.00 மணி அளவில் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத் தலைவர் டி. ஆர் .சேதுராமன் மற்றும் இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை ஆகியோர் முன்னிலையில் மாநில இளைஞரணி துணை செயலாளர் மு. சண்முகப்பிரியன் மாலை அணிவித்தார்.

துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், சூளைமேடு நல். ராமச்சந்திரன், தொழிலாளர் அணி தலைவர் ச. மாரியப்பன், இளைஞர் அணி துணை செயலாளர் இரா. மாரிமுத்து, தரமணி ம.ராஜி, கலைஞர் கருணாநிதி நகர் கரு .அண்ணாமலை, மா.இன்பக்கதிர், சுப்பிரமணியன், கண்ணன், சுரேஷ், மணிமொழியன், செயசினன், மூவேந்தன், விருகை செல்வம், மணிபாரதி, வழக்குரைஞர் அ.அன்பரசன், சரவணன், தமிழ் பிரபா, பவித்ரா, புரட்சி தமிழன், ஜெ.ஜனார்த்தனம், த.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் பாலம்

பெரியார் பாலம் (சிம்சன்) அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை, வட சென்னை மாவட்டத்தின் சார்பாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி மாலை அணிவித்தார்.

அய்ஸ் அவுஸ்

திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கேசரி இனிப்பு வழங்கப்பட்டது. 17.09.2024 முற்பகல் 11.30 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் தந்தை பெரியாரை 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெகிழித்திரை வைக்கப்பட்டு, அதன் கீழே தந்தை பெரியாரின் படம் வைத்து மாலை அணிவிக்கப்பட்டது.

பகுதி கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் இர வில்வநாதன் தலைமையில், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி முன்னிலையில் 150 பேருக்கு கேசரி இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட துணை செயலாளர் கோ.வீ. ராகவன், தொழிலாளர் அணி தலைவர் ச மாரியப்பன், இளைஞர் அணி செயலாளர் ந.மணிதுரை, இளைஞர் அணி துணைத் தலைவர் ச. மகேந்திரன், இளைஞர் அணி துணை செயலாளர் இரா மாரிமுத்து, தரமணி ம.ராஜி, பெரியார் ஆதவன் மற்றும் இன்பக் கதிர் ஆகியோர் பங்கேற்றனர்.

நொச்சி நகர்

மயிலை நொச்சி நகர் பகுதியில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. 17.09.2024 நண்பகல் 12.00 மணி அளவில் மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெகிழித்திரை வைக்கப்பட்டு, அதன் அருகே தந்தை பெரியாரின் படம் அலங்கரித்து வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. பகுதி கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி முன்னிலையில் 100 பேருக்கு கேசரி இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட துணை செயலாளர் கோ.வீ. ராகவன், தொழிலாளர் அணி தலைவர் ச மாரியப்பன், இளைஞர் அணி செயலாளர் ந.மணிதுரை, இளைஞர் அணி துணைத் தலைவர் ச. மகேந்திரன், இளைஞர் அணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து, தரமணி ம.ராஜி, பெரியார் ஆதவன் மற்றும் இன்பக் கதிர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒரத்தநாடு வட்டம் வடசேரியில்…

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடசேரியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு வடசேரி இளைஞரணி செயலாளர் ஆ.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட இணைச் செயலாளர் தீ.வ.ஞானசிகாமணி, தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் முத்து. இராஜேந்திரன், தஞ்சை மாவட்ட மகளிரணி தலைவி இ.அல்லிராணி, வடசேரி கிளைக்கழக தலைவர் த.இராமசாமி, ந.குப்புசாமி.திக, மெய் இளங்கோ, என்.பி.சரவணன், வடசேரி ஊராட்சி மன்ற தலைவர் சோம.நந்தகுமார். தி.மு.க., இரா.இராஜலட்சுமி, வி.எம்.அய்யநாதன், மணிகண்டன், நாடி. இரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. வடசேரியில் மூன்று இடங்களில் மோட்டார் பைக்கில் ஊர்வலமாக சென்று கழககொடிஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி

அரூர் கழக மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பகுத்தறிவு கலைத்துறை சார்பாக புதிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, கழக கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் மோகன் குமார் தலைமை தாங்கினார். மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி, உரை நிகழ்த்தினார். மாவட்ட ப.க.துணைச் செயலாளர் ராஜவேங்கன், மாவட்ட, தொழிலாளர் அணி செயலாளர் சின்னதுரை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் பூங்குன்றன், ஒன்றிய பொறுப்பாளர் அய்யனார், மாணவர் கழக ராஜேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று முழக்கமிட்டு சிறப்பித்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டியில் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மிக எழுச்சியோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட இந்நிகழ்வில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முல்லை அரசு, தமிழ்வாணன், கழக ஒன்றிய பொறுப்பாளர் அழகிரி, பொன் தங்கராசு ஆகிய பெரியார் பெருந்தொண்டர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கழக பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர் தங்கராசு ஒன்றிய பொறுப்பாளர் அய்யனார், இளைஞர் அணி ராசேசன், ராகுல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் ராஜவேங்கன், ஒன்றிய தலைவர் பூங்குன்றன் உள்ளிட்ட அடுத்த தலைமுறை நிர்வாகிகள் பங்கேற்றனர். பாப்பிரெட்டிப்பட்டி அம்பேத்கர் படிப்பகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியாளர்கள் பங்குபெற்று உறுதிமொழி ஏற்று மகிழ்ந்தனர். மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

ஆத்தூர்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழா – ஆத்தூர் வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம்-செந்தாரப்பட்டி தலைவாசல் பகுதி என கழக மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாட பெற்றது ஆத்தூரில் மாவட்ட தலைவர் த.வானவில் தலைமையில் ‌கழக தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பல்வேறு அரசியல் கட்சிகளான திமுகவை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் அதேபோல ஆத்தூர் அதிமுக சட்டமன்றத் உறுப்பினர் ஜெய்சங்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஅய், இந்திய யூனியன்-முஸ்லிம் லீக், தமிழக வெற்றி கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ‌ மனித நேய ஜனநாயக கட்சி, அருந்தமிழர் மக்கள் கட்சி, மனித உரிமைகள் கழகம் என சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏராளமான இளைஞர்கள் பெண்கள் மாணவர்கள் சிறுவர் சிறுமிகள் என ஆத்தூர் நகரமே விழா கோலம் பூண்டது.

லட்சிய கொடியாம் கழக கொடியேற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி புத்திர கவுண்டம்பாளையம் செல்வம் அவர்களின் அன்பளிப்பாக வருகை தந்த அனைவருக்கும் எழுதுகோல் வழங்கி மகிழ்ந்தனர்.
பின்னர் அனைவரும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான சமுகநீதி நாள் உறுதிமொழியேற்று விழாவை நிறைவு செய்தார்கள் .

அருப்புக்கோட்டை பெரியார் மாளிகையில்…

தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாள் விழா – அருப்புக்கோட்டை பெரியார் மாளிகையில், 17.09.2024 செவ்வாய் காலை 10 மணியளவில், மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன் தலைமையில், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், நகர கழக செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணித் தலைவர் ஆ.கிள்ளிவளவன், பெரியார் பிஞ்சு ஆ.திராவிடநாதன் ஆகியோர் தோழர்களின் கொள்கை முழக்கத்துடன் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.அழகர் கழகக் கொடியேற்றினார். தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் இயக்க மாநிலப் பொறுப்பாளர் வெ.ஜோசப் மற்றும் தோழர்கள் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட அமைப்பாளர் வெ.முரளி, நகர அமைப்பாளர் க.சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளர் இரா.முத்தையா, இளைஞரணிச் செயலாளர் க.திருவள்ளுவர்‌, பொ.கணேசன், நா.அறிவழகன், தங்கப்பாண்டியன், முத்துக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் இயக்க மண்டலச் செயலாளர் வழக்குரைஞர் மு.முருகன், மகளிரணிப் பொறுப்பாளர்கள் இராஜேஸ்வரி, சுப்புலட்சுமி, மேனாள் நகரச் செயலாளர் க.குருசாமி,‌ செ.இன்னாசிமுத்து, விடுதலை அரசு, மணிகண்டன், ராஜா மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மதியம் 12 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சதிஷ் குமார், பிரபு, தாமரைச்செல்வன், அருண்குமார், வழக்குரைஞர் முருகன் மற்றும் தோழர்கள் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் பகுத்தறிவு வாசகர் வட்ட அமைப்பாளர் ஆசிரியர் ச.சண்முகநாதன் உண்மை இதழ்கள் வழங்கினார்.

விருதுநகர்

விருதுநகர் – மதுரைச் சாலையில், சுயமரியாதைச் சுடரொளி வி.வி.ஆர். சிலை அருகில், மாவட்ட கழக தலைவர் கா.நல்லதம்பி தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி முன்னிலையில் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்திய பொதுவுடைமை இயக்கப் பொறுப்பாளர் கே.எஸ்.காதர்மைதீன், மாவட்டக் குழு உறுப்பினர் பாலமுருகன், நகரச் செயலாளர் முத்துக்குமார்,‌ தமிழ்ப்புலிகள் இயக்க மாநிலத் தொழிற்சங்கச் செயலாளர் விடியல் வீரப்பெருமாள், தலித் விடுதலை இயக்க மாநில இளைஞரணிச் செயலாளர் செ.பீமராவ் சாணக்யா, காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிவப் பொதுச்செயலாளர் டி.எட்.வர்டு, ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.சுப்புராஜ் காரியாபட்டி ஒன்றிய கழக செயலாளர் ஆதிமூலம் மற்றும் தோழர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *