ஒசூர், ஆக. 1- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக மக்கள் கூட்டமைப்பு அமைப் பினர் மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான ஒன்றிய மாநில பிஜேபி அரசுகளை கண்டிக்கும் விதமாக மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒசூர் ராம் நகர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், தொழிற் சங்கங் கள் உள்ளிட்ட அனைத்து கட் சிகளும் சேர்ந்து தமிழக மக்கள் கூட்டமைப்பு அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப் பாளர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் எம்.ராமசந்திரன் தலைமையில் மணிப்பூரில் நடைபெற்ற பெண் கள்மீதான வன்கொடுமை நிகழ் வைக் கண்டிக்கும் விதமாகவும் அவற்றை தடுக்க தவறி அமைதி காத்து வரும் ஒன்றிய பிஜேபி மற்றும் மணிப்பூர் மாநில பிஜேபி அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட் டவர்கள் பழைய பெங்களூர் சாலையில் அணிவகுத்து மனித சங்கிலியாக நின்று ஒன்றிய அரசுக்கு எதிரான முழக்கங் களை எழுப்பி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.இதில் காங் கிரஸ் கட்சி சார்பில் நாடா ளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார்,அய்.என்.டி.யு.சி தேசிய செயலாளர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. மனோகரன்,திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அ. செ.செல்வம், மதிமுக மாநகர செயலாளர் ஈழம் குமரேசன், சி.பி.அய் மாவட்ட குழு மாதையன், மனிதநேய ஜன நாயக கட்சி மாநில துணைச் செயலாளர் நவுசாத், தமிழக வாழ்வுரிமை கட்சி காதர் பாஷா, மாமன்ற பெண் உறுப் பினர்கள் சார்பில் பாக்கிய லட்சுமி, தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், புரட் சிகர தொழிலாளர் முன்ணணி குறிஞ்சி, தமிழ்தேச குடியரசு இயக்கம் ஆஷா, அசோக் லைலேண்ட் தொழிற்சங்கம் பரசு ராமன், தமிழ் மைந்தர் மன்றம் நடவரசன், மக்கள் ஒற்றுமை மேடை சந்ரு, சமுகநீதி பாது காப்பு கவுன்சில் பிரபாகரன், என்.டி.எல்.எப் தொழிற்சங்கம் சுந்தரம் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.
இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், கீர்த்திகணேசன், தியாகராசன், திமுக மாநகர பொது சுகாதர குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, நகர அவை தலைவர் கருணாநிதி, திராவிடர்கழக மாவட்ட தலை வர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி, மாவட்ட. துணைத் தலைவர் இரா.ஜெயசந்திரன், ஒன்றிய அமைப்பாளர் து. ரமேஷ், இளைஞரணி ஹரிஸ், வழக்குரைஞர் அஃப்ரிடி, அய் என்டியுசி தொழிற்சங்கம் முனிராஜ், முத்தப்பா ஒருங்கி ணைப்பாளர் தமிழரசன் மற் றும் கலந்து கொண்ட அமைப் புகளின் பல்வேறு பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.