மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் கொடி அரங்கத்தில் இன்று (13.10.2024) காலை 10 மணிக்கு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. தொடக்க விழா நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் த.ம.எரிமலை தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பா.முத்துக் கருப்பன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் மு.சித்தார்த்தன், மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் நா.கணேசன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் வீரராகவன் தங்கத்துரை, திருமங்கலம் நகரத் தலைவர் மு. சண்முகசுந்தரம்,திருமங்கலம் நகர செயலாளர் சி.பாண்டியன்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் இரா. கலைச்செல்வி,பொதுக்குழு உறுப்பினர் அ.மன்னர்மன்னன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ம.ரஞ்சித்குமார், மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர் ச.அறிவுச்செல்வி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் பா.சதீஷ்குமார், மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் ச.அறிவுபாண்டி, மாவட்ட காப்பாளர் ரோ.கணேசன், தொழிலாளர் பேரவை மாநில தலைவர் கா.சிவகுருநாதன்,தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா இளவரசன். ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
தலைமை கழக அமைப்பாளர் மதுரை வே. செல்வம் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் மா அழகிரிசாமி தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் முதல் வகுப்பை நடத்தினார். சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் முனைவர் வா.நேரு அவர்களும், பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்ற தலைப்பில் முனைவர் அதிரடி அன்பழகன் அவர்களும், இந்து-தமிழர்-திராவிடர் என்ற தலைப்பில் பிரின்சுஎன்னாரெசு பெரியார் அவர்களும், தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் வி.சி.வில்வம் அவர்களும், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். பெரியார் பயிற்சிப் பட்டறையில்
56 மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.