தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கோவை, சென்னை, சேலம், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 499 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2024
பொறியியல் பட்டதாரி பயிற்சி
(Graduate (Engineering) Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை: 201
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் – 170
சிவில் இன்ஜினியரிங் – 10
கம்பியூட்டர் சயன்ஸ் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் – 12
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 9
கல்வித் தகுதி: படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 9,000
பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை: 140
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் – 125
சிவில் இன்ஜினியரிங் – 5
கம்பியூட்டர் சயன்ஸ் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் – 7
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 3
கல்வித் தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் / சிவில் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 8,000
பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை: 158
TNSTC -– கோவை மண்டலம் – 93
TNSTC -– திருநெல்வேலி மண்டலம் – 53
SETC TN Ltd, சென்னை – 22
கல்வித் தகுதி: B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 9,000
பயிற்சி கால அளவு: 1 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை: டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப் பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு தேர்வு செய்யப் படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://boat-srp.com/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.