சென்னை, அக்.13 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை (14.10.2024) வெளியிடுகிறார். தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை மாநிலத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. 2023- 2024ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதியுடன் முடிந்தது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4இல் தொடங்கிய நிலையில், மார்ச் 25ஆம் தேதியோடு நிறைவடைந்தது. தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26இல் தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ஆம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
