திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பாக, பெரியார் கருத்துகள் வண்ணமயமாகத் தயார் செய்யப்பட்டு, தினமும் பதிவு செய்யப்படுகிறது. இது சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பட்ட மக்களால் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை, திருமங்கலத்தில் இன்று 45 ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற இருக்கிறது. அதனையொட்டி மண்டபம் நுழைவாயிலில், இக்கருத்துகளை ‘பிளக்ஸ்’ வடிவத்தில் வைத்திருந்தது புதுமையாக இருந்தது.