சென்னை,அக்.13 மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடை தேவை குறித்து பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதன்மை கல்வி அலு வலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு (நகராட்சி, மாநகராட்சி, ஆதிதிராவிடர்) மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கள்ளர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு பள்ளிகள்) அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு மற்றும் சீருடை தேவை குறித்து படிவத்தில் பள்ளி வாரியாக உரிய விவரங்களை பதிவு செய்து முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைத்திட வேண்டும்.
மாணவர்களின் பெற்றோர்களிடம் இப்பொருள் சார்ந்து விருப்பம் குறித்து ஏற்ெகனவே கருத்துக்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் விவரங்கள் தொகுக்கப்பட்டு வரும் நிலையில் விடுபட்ட பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று விவரங்களை வரும் 18ஆம் தேதிக்குள் நிறைவு செய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.