கழகத் தலைவர் இரங்கல்
கருநாடக மாநிலம், பெங்க ளூருவில் சீரிய பகுத்தறிவாளரும், தந்தை பெரியார் பற்றாளரும், சுயமரியாதை வீரருமான பெரும் புலவர் கி.சு. இளங்கோவன் அவர்கள் நேற்று (11.10.2024) பிற்பகல் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
அவரது குடும்பமே கருநாடகத்திலுள்ள திராவிட இயக்கப் பற்றுள்ள ஒரு சீரிய குடும்பம். கழகத் தலைமைப் பொறுப்பாளர்களிடமும், நம்மிடமும் மிகுந்த அன்புடன் பழகிய மொழி, இனஉணர்வாளரான மனிதநேயர்.
அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரை இழந்து வருந்தும் அவரது வாழ்விணையர், குடும்ப உறவுகள், கொள்கை உறவுகள் அனைவருக்கும் ஆறுதல் கூறி, நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர்
மு. ஜானகிராமன் இத்தகவலை நமக்குத் தெரிவித்தார், நன்றி.
மறைந்த கொள்கையாளருக்கு நமது வீர வணக்கம்.
கிவீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
12.10.2024