ஜெயங்கொண்டம், அக். 12- ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவ மாணவிகள் கல்வியிலும் விளையாட்டிலும் தொடர்ச்சியாக சாதனைப் புரிந்து வருகின்றனர். பள்ளி கல்வித்துறை நடத்திய 2024-2025 ஆம் ஆண்டிற்கான பல போட்டி, பிரிவுகளிலும் பள்ளி வீர, வீராங்கனைகள் குறுவட்ட முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில போட் டிகளில் கலந்துகொண்டு சான் றிதழும், பதக்கங்களும் மற்றும் பரிசுத் தொகையையும் பெற்றுக் கொண்டு உள்ளனர்.
குறுவட்ட அளவில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் கூடைப்பந்து, இறகுப்பந்து, வலைப்பந்து, தடகளம், கைப்பந்து, எறிபந்து, சிலம்பம் ஆகிய போட்டிகளில் முதலிடம் பிடித்தது மட்டுமல்லாமல் மாவட்ட போட்டிகளில் தகுதி பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் போட்டிகளில் கூடைப்பந்து, இறகுப்பந்து, சிலம்பம்,கைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டாம் இடத்திற்கான பரிசுத்தொகை ரூபாய் 43,000/- பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் கூடைபந்து, கைப் பந்து மற்றும் மட்டைப்பந்து ஆகியவற்றில் தகுதி பெற்று மாநில போட்டிகளில் பங்கு பெற்ற வீரர்கள் பிரதீப் குமார், ஹரிஹரன், அகிலன், சரவண குமார், ஹரிநாராயணன் மற்றும் ராகுல் ஆகியோர்கள் அரியலூர் மாவட்டத்திற்கும், நமது பள்ளிக்கும் பெருமை சேர்த்தனர்.
வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர்.ரவி சங்கர், ஆர்.ரஞ்சனி ஆகியோரைப் பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.