திருவள்ளூர், அக். 12- மைசூரு- தர்பங்கா செல்லும் ‘பாக்மதி ரயில் சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது, 2 பெட்டிகள் தீ பற்றி எரிந்தது.
எனினும் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சிலருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரயில் விபத்தில் 6 பெட்டிகள் தரம் புரண்டது. பாக்மதி ரயிலில் 1,360 பயணிகள் பயணித்துள்ளனர்.
விபத்தில் சரக்கு ரயிலில் தீ பற்றியது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு தீ அணைக்கப்பட்டது. 19 பேருக்கு காயம் ஏற்பட்டது. லேசான காயம் உள்ளவர்கள் அருகில் உள்ள பொன்னேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் பயணிகளுக்கு வருவாய்த் துறை மூலமாக உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் உடனடியாக ஏற்பாடு செய்து தரப்பட்டது. 3 திருமண மண்டபங்களில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தை அறிந்து அதிர்ச்சியுற்றோம். இந்த விபத்தையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து ஏற்பட்ட உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்” என்றார்.
குறிப்பாக தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து ரயிலில் சிக்கியவர்களை மீட்டனர். அதே போல் பாதிக்கப்பட்ட பெட்டிகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க தீயணைப்புத்துறையினர் தாமதமின்றி செயல்பட்டனர். இதனால் காயமடைந் தவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு அவர்கள் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,
மருத்துவமனை நிர்வாகம் விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடனேயே சிறப்பு இருக்கைகள் ஒதுக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மற்றும் செவிலியர்கள்குழு தயாராக இருந்ததது, இதன் மூலம் உயிரிழப்பு ஏதும் இன்றி அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை!
மாவட்ட ஆட்சியர்களுக்கு
தமிழ்நாடு அரசு கடிதம்
சென்னை, அக்.12- தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவு அளித்துள்ளது.
கன முதல் மிக கனமழை பெய்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது.
இதனால், அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
பேரிடர்களை கையாளுவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங் களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.