நாமக்கல், அக்.11- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் அய்ம்பெரும்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்ற உள்ளார். விழா ஏற்பாட்டுப் பணிகளில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
விழா ஏற்பாடுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில், 200 கொடிகளின் செலவுத் தொகை ரூபாய் 22,000த்தை மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோ ஏற்றுக்கொண்டார்.மாவட்ட திராவிடர்கழக செயலாளர் வழக்குரைஞர் வை. பெரியசாமி கூட்டத்திற்கு நன்கொடை ரூபாய் 10,000மும், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீரமணிராஜூ ரூபாய் 10,000மும், பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர் வீர. முருகன் ரூபாய் 5000மும், குமாரபாளையம் நகர தலைவர் சு. சரவணன் ரூபாய் 5000மும், மாவட்ட கழகத் துணைத் தலைவர் அசேன் ரூ. 2000மும் வழங்குவதாக அறிவித்தார்கள். கூட்டத்தில் மொத்த தொகை ரூ.54,000 அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் சிறப்புரையாற்றும்
பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் கழகப்பொறுப்பாளர்கள்
சத்தியமங்கலம், அக். 12- அக்டோபர் 27 அன்று சத்தியமங்கலம், தூக்கநாயக்கன் பாளையத்தில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – கைவல்யம் தொண்டறச் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், கோபி மாவட்ட தலைவர் நம்பியூர் மு.சென்னியப்பன், மாவட்ட மாணவர் கழக தலைவர் சூர்யா நம்பியூர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் சுவரெழுத்துப் பணிகளை பார்வையிட்டனர். (11-10-2024)