திருமருகல், அக். 12- நாகப் பட்டினம் மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டையில் 9.10.2024 அன்று தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியார் பட ஊர்வலம் பொதுக்கூட்டம் மிக எழுச்சியோடு நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன் வரவேற்பு உரையாற்றினார்.
பெரியார் பட ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க கழக லட்சிய கொடியுடன் கழகத் தோழர்கள் புடை சூழ அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் வாகனத்துடன் திருமருகல் சந்தைப்பேட்டையில் தொடங்கி முக்கிய சாலை வழியாக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தது.
கூட்டத்தில் நாகை மாவட்ட கழகத்தின் செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா, திருவாரூர் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, தலைமை கழக அமைப்பாளர் வி.மோகன், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கடைவாசல் குணசேகரன், மாநில விவசாய தொழிலாளர் அணியின் செயலாளர் வீர.கோவிந்தராஜ், கழக பேச்சாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, திருவாரூர் பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஈவேரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.எஸ்.ஸ்டாலின்பாபு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ஆர்.என்.அமிர்தராஜா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார்.
திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
நாகை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி நன்றி கூறினார் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், திருவாரூர் மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், நாகை மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, திருமருகல் ஒன்றிய தலைவர் கு.சின்னதுரை, நாகை மாவட்ட தொழிலாளி அமைப்பாளர் இராச.முருகையன், மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி, நாகை நகர தலைவர்தெ.செந்தில்குமார், நாகை மாவட்ட மகளிர் பாசறையின் தலைவர் செ.கவிதா, செயலாளர் ஜெயப்பிரியா, அலமேலு, திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் பிளாட்டோ, நாகை மாவட்ட இளைஞரணி செயலாளர் சுர்ஜித், கு.சிவானந்தம், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகை ப.அறிவழகன், திருமருகல் ஒன்றிய அமைப்பாளர் அ.அரவிந்த்வளவன், காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் ப.ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் எம்.லெனின், திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ஒன்றிய பிரதிநிதி ஜெயக்குமார், மாவட்ட அயலக அணி தலைவர் சாதிக் ஜபார், மாவட்ட சிறுபான்மை அணியின் அமைப்பாளர் ஆர்.வி.எஸ்.ரபிக், திருச்செங்காட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலியமூர்த்தி, மகளிர் பாசறை ஒன்றிய தலைவர் இரா.ரம்யா, பொதுக்குழு உறுப்பினர் கமலம், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் செருநல்லூர் பாக்கியராஜ், கீழையூர் ஒன்றிய தலைவர் ரெ.ரங்கநாதன், வேதை ஒன்றிய செயலாளர் அய்யப்பன் மற்றும் அனைத்து கட்சி தோழர்கள், கழகத்தினுடைய அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தோழர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.