பக்தி முத்திப் போச்சு! மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா?

2 Min Read

பள்ளி சென்று படிக்கிறாராம் கிருஷ்ணன்!

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான ராம் கோபால் திவாரி ஆக்ராவில் உள்ள மதுராவில் இருந்து குழந்தை கிருஷ்ணர் சிலை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிவந்தார்.
மிகவும் பயபக்தியோடு தினமும் அதை வழிபட்டு வந்த ராம்கோபால் தீவாரிக்கு அந்தச் சிலையை பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது.
இதற்காக அவர் ஆக்ராவில் உள்ள சாந்திபனி முன்சி மழலையர் பள்ளியில் போய் அந்தச் சிலைக்கு படிக்க இடம் போடக் கேட்டுள்ளார். பள்ளி நிர்வாகமோ இது குழந்தைகளுக்கான பள்ளி. சிலைகளை விளையாட வேண்டுமானால் வைத்துக் கொள்வோம் என்று கூறிவிட்டது. கோபம் கொண்ட அவர் நேராக இஸ்கான் அமைப் பிடம் சென்று புகார் கூறினார்.

ஞாயிறு மலர்

ரிக்ஷாவில் செல்லும் லட்டு கோபால்
(கிருஷ்ணர் சிலையும் ராம்கோபால் திவாரியும்)

இஸ்கான் அமைப்பின் பரம பக்தர்கள் பிரதமர் மோடி முதல் குடியரசுத் தலைவர் வரை என்பது அனைவருக்கும் தெரியும்.
உடனே இஸ்கான் அமைப்பின் மூத்த நிர்வாகி ரூபா ரகுநாத் தாஸ், உங்கள் பள்ளியில் குழந்தைகள் படிக்கிறார்கள். ராம்கோபால் திவாரியின் குழந்தைக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்று அந்தப் பள்ளிக்கு கடிதம் எழுதுகிறார். வேறு வழியில்லாமல் ரூ.47,000 கட்டணமாக பெற்றுக்கொண்டு அந்தச் சிலைக்கு படிக்க இடம் கொடுத்திருக்கிறார்கள்.
அதற்காக டிஜிடல் பிறப்புச் சான்றிதழ் மற்றும் உலக அடையாள அட்டையை (ஆதார் கார்ட் போன்று) இஸ்கான் அமைப்பு கொடுத்துள்ளது) அதை வைத்து அட்மிஷன் கொடுத்து விட்டார்கள்.

ஞாயிறு மலர்

சிலைக்கு (லட்டு கோபாலுக்கு)
புத்தகப் பை மற்றும் சிற்றுண்டி – தண்ணீர் பாட்டில் மற்றும் பால் புட்டி.

ஆக்ராவின் மன்ஷா சாலையில் இருந்து புர்ஜா சாலையிலுள்ள சாந்தீபனி முனி பள்ளியில் குழந்தைகளுடன் லட்டு கோபால் தினமும் படிக்க வருகிறார். ரிக்ஷாவில் அவரை பள்ளிக்கு அழைத்து வரும்போது தண்ணீர் பாட்டில் மற்றும் மதிய உணவும் வைக்கப்படுகிறது. பள்ளியில் குழந்தை களுடன் அமர்ந்து லட்டு கோபால் என்று பெயர் சூட்டப்பட்ட சிலை ஆரம்பக் கல்வியைப் பெறுகிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் எனது நம்பிக்கை எனது பிள்ளை இந்த கிருஷ்ணன் தினசரி வாழ்க்கை அன்பு லட்டு கோபாலின் சேவை வழிபாட்டில் கழிகிறது. எனது பிள்ளை படிக்காமல் இருக்க முடியாது. ஆகவே, அவருக்கு நான் கல்வி கற்ற பள்ளியில் சேர்த்தேன் என்று கூறினார்.

ஞாயிறு மலர்

பள்ளி முடிந்து வீடு திரும்பும் லட்டுகோபால்,

நான்கு ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்லும் லட்டு கோபால் இப்போது மூன்றாம் வகுப்பு மாணவர். நாள் தோறும் முறையாக பள்ளிக்குச் செல்கிறார். வகுப்பில் சாதாரண குழந்தைகளைப் போலவே அவரை இருக்கையில் அமர வைக்கிறார்கள்.
அவருக்காக கொண்டு செல்லும் மதிய உணவு மற்றும் சிற்றூண்டி களை மாலை பசு மாட்டிற்கு கொடுத்துவிடுகிறார்.
சரியாக பள்ளி முடியும் நேரத்தில் அவரும் வரிசையில் நின்று பிற குழந்தைகளை பெற்றோர் அழைத்துச்செல்வது போல் பள்ளியில் உள்ள லட்டு கோபால் என்ற கிருஷ்ணர் சிலையை அவரிடம் கொடுக்கிறார்கள். அவரும் வீட்டுக்கு தூக்கிச் செல்கிறார்.
இதே ஆக்ரா மாவட்டத்திற்கு அருகில் உள்ள பாக்பக் மாவட்டத்தில் பள்ளிக் கட்டணத்தை செலுத்ததாதால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை வெயிலில் அமர வைத்தது வேறு ஒரு தனியார் பள்ளி நிர்வாகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *