புதுக்கோட்டை பகுதியில் துணை தாசில்தாராகப் பணியாற்றியவரும், பகுத்தறிவாளர் கழகத்திலும் துணைத் தலைவராக அப்பகுதியில் செயல்பட்டவருமான தோழர் ஆதி.கணபதி (வயது 90) அவர்கள் 7.10.2024 அன்று மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். பெரியார் பெருந்தொண்டர் தர்மராசன் (திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் தந்தையார்) அவர்களின் குடும்ப நண்பராகத் திகழ்ந்தவர். அவருடைய மக்கள், மருமக்கள், குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு நமது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
11.10.2024
சென்னை
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்