கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக கிராமப்புறங்களில் பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான பிரச்சாரம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், இராமபுரம் ஊராட்சி இலட்சுமிபுரத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்க திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். திராவிட நட்புக் கழக மாவட்ட பொறுப்பாளர் விஷ்ணு, மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ். அலெக்சாண்டர், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் எஸ்.குமாரதாஸ், தோவாளை ஒன்றிய தலைவர் மா ஆறுமுகம், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், மாவட்ட கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை தோழர்கள் தும்பவிளை மு.பால்மணி, நல்லூர் பெருமாள், பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர் ஏராளமான பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள் அடங்கிய நூல்கள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக கிராமப்புறங்களில் பகுத்தறிவு விழிப்புணர்வு
Leave a Comment