அரே கிருஷ்ணா இயக்கம் எனப்படும் உலக கிருஷ்ண பக்த அமைப்புக்குப் பெயர்தான் இஸ்கான் என்பதாகும்.
பாட்னாவில் உள்ள இஸ்கான் தலைவர் கிருஷ்ண கிருபா தாஸ் மீது கோவிலுக்கு வந்த பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிகேட்டு வந்தவர்களையும் இஸ்கான் அமைப்பினர் அடித்து விரட்டியுள்ளனர்.
கிருஷ்ண கிருபா தாஸுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. 2021இல் இவர் கோவிலுக்கு வரும் பல பெண்களை பாலியல்வன்கொடுமை செய்ததாகவும் – புகார் கொடுக்கச் சென்றால் அவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் இஸ்கான் கோயில் தலைவர் கிருஷ்ண கிருபா தாஸ் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட ஒரு பெண்ணை அவரது அறைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெண்ணின் சார்பில் நீதிகேட்டு வந்தவர்களையும், பெண்ணையும், உடன் வந்த நபர்களையும் இஸ்கான் நிர்வாக குண்டர்களை வைத்து தாக்கியதாக தைனிக் பாஸ்கர் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், கோட்வாலி காவல் நிலைய காவலர்கள் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர்.
அதில் கோவிலின் செக்யூரிட்டியாக பணிபுரியும் கிரிதாரி தாஸ் தனது உறவுக்காரப் பெண் ஒருவரை, கிருஷ்ண கிருபா தாஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் ஏற்ெகனவே இது போன்று பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தலைமைச்சாமியார் செய்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து இஸ்கான் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.
உடனே இந்தப்புகார் தொடர்பாக நாங்களே பேசிக்கொள்கிறோம் என்று கூறிய இஸ்கான் நிர்வாகம் காவல்துறையினரை அனுப்பி விட்டது.
மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவர்களது உறவினர்களும் தங்களுக்கு நீதி கேட்டு வந்தனர். அப்போது இஸ்கான் அமைப்பினர் ரவுடிகளை வைத்து அடித்து விரட்டியுள்ளனர்
இந்த மோதல் குறித்து கேள்விப்பட்டதும், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆணையர் முராரி பிரசாத் கோட்வாலி காவல் நிலையத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் இந்த மோதல்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதாக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணைக் கண்காணிப்பாளர் (DSP) தெரிவித்தார். நிகழ்வு தொடர்பான சில காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
2021இல், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர்களுள் ஒருவரான தேஜ் பிரதாப் ஒரு பதிவில் பாட்னாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் தலைவரும் அவருக்கு வேண்டிய சில பிரமுகர்களும் கோவிலில் வைத்து, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர்; பெண்கள் மற்றும் சிறுமிகள் துன்புறுத்தப்பட்டதாகவும் இது தொடர்பாக புகார் அளித்தால் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியும் அவர்களுக்குப் பணம் கொடுத்தும் விரட்டி விடுகின்றனர் என்று குற்றம்சாட்டியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
தற்போது அதே இஸ்கான் அமைப்பின் தலைவர் மீண்டும் தனது கோவிலில் செக்யூரிட்டியாக பணிபுரியும் நபரின் உறவுக்காரப் பெண்ணையே பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நீதி கேட்க வந்தவர்களையும் அடித்து விரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசாரம் என்ற சாமியார் நீதிமன்றத்தில் பகவான் கிருஷ்ணன் செய்ததைத்தான் நானும் செய்தேன் என்று சொல்லவில்லையா?
ஹிந்து மதக் கடவுளான கிருஷ்ணன் என்பவனே காமுகனாக சித்தரிக்கப்பட்டவன்தான்.
நீராடிய பெண்களின் ஆடைகளைத் திருடிச் சென்று மரக்கிளையில் அமர்ந்து கொண்டு குளிக்கும் பெண்களின் நிர்வாணத்தை ரசித்தவன் தானே ‘பகவான்’ கிருஷ்ணன். அந்தக் கடவுளை முன்னிறுத்தி அமைப்பை வைத்துள்ளவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது இயல்பே!