‘தெய்வீக பக்தர்கள் பேரவை’ கண்டனம்
சிதம்பரம், அக்.11 நடராஜர் கோவில் கருவறையை இழிவுபடுத்திப் பேசிய தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் எச்.ராஜாவுக்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்தத் தவறும் இல்லை. கோயில் கருவறையில் கிரிக்கெட் விளையாடினால்தான் தவறு என்று பா.ஜ.க ஒருங்கி ணைப்பாளர் எச்.ராஜா கூறியி ருப்பது நகைப்பிற்குரியது.
திருக்கோவில்களில் மூலவர் இருக்கும் இடம் கருவறை ஆகும். இங்கு கடவுளின் வழிபாடு மட்டுமே.
திருக்கோவிலில் கருவறை
எச்.ராஜாவுக்கு வேண்டுமானால் கிரிக்கெட் மைதானமாக விளங்க லாம்; ஆனால், பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் கருவறை மெய்மறந்து வணங்கும் வழிபாட்டு ஸ்தலமாகும்.
எனவே கருவறை கிரிக்கெட் மைதானம் என்று பொருள்படும் விதமாக எச்.ராஜா பேசியது கண்ட னத்துக்குரியது. பக்தர்கள் எச்.ராஜாவை ஒரு பொழுதும் மன்னிக்க மாட்டார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அம்மாப்பேட்டை பகுதி நிர்வாகி பட்டியல் இனத்தைச் சார்ந்த இளையராஜாவை தீட்சிதர்கள் தாக்கி அவரது அலைபேசியைப் பிடுங்கிய அராஜக செயலுக்கு
எச்.ராஜா ஆதரவு அளிப்பது கண்ட னத்துக்குரியது.
மேலும் தமிழ்நாட்டில் 2500 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திய ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின், இந்து சமய அற நிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகி யோரை உண்மைக்கு புறம்பாக எச்.ராஜா விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல! இதை ஒருபோதும் மக்கள் நம்ப மாட்டார்கள்.
எச்.ராஜா தான் இருப்பதைக் காட்டிக் கொள்வதற்காக மனதில் பட்டதை ஒரு மனநோயாளியை போல பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
திருக்கோவில் கருவறையை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா சிதம்பரம் வருகின்ற போது பக்தர்களின் எதிர்ப்பை தெரி விக்கின்ற வகையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.