மூத்த முன்னோடி காரைக்குடி கழக மாவட்டம் இளங்குடியை சார்ந்த காந்தி உடல்நலமில்லாமல் இருப்பதை அறிந்து மாவட்ட கழக தோழர்கள் காப்பாளர் சாமி திராவிடமணி தலைமையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ம.கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, காரைக்குடி மாநகர தலைவர் ந.செகதீசன், மாநகர துணை தலைவர் பழனிவேல்ராசன், மாநகர செயலாளர் மு.பிரவீன், மாவட்ட ப.க. தலைவர் எஸ்.முழுமதி, மாவட்ட ப.க.அமைப்பாளர் மு.செல்வம், கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ.பாலு, ச.கைவல்யம் ஆகியோர் உடனிருந்தனர். அய்ம்பது ஆண்டுகளாக இளங்குடி காந்தியின் இரண்டு கால்களும், செயலிழந்த நிலையிலும் மூன்று சக்கர வாகனத்தில் கழகம் நடத்தும் அனைத்து நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும் தவறாது பங்கேற்பவர். சில ஆண்டுகளாக உடல் நலிவுற்று இல்லத்திலேயே இருந்து வருவதால் காரைக்குடி மாவட்ட கழகத் தோழர்கள் அன்னாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.