கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான திருமாவேலன் அவர்களின் தாயாரும் – பெரும்புலவர் திரு. படிக்கராமு அவர்களின் வாழ்விணையருமான திருமிகு முத்துலக்குமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
திருமிகு முத்துலக்குமி அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, பெற்றெடுத்து – ஆளாக்கி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் திருமாவேலன் அவர்களுக்கும், வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாடும் திரு. படிக்கராமு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்க்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
கழகத் தலைவர் இரங்கல்
கலைஞர் தொலைக்காட்சியின் ஆசிரியர் எழுத்தாளர் ப. திருமாவேலன் அவர்களின் அன்னையார் மறைவுற்ற செய்தி அறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், அலைப்பேசி மூலம் திருமாவேலனிடம் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.